கேரளத்தில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் கொலை செய்யப்படுவதும், தற்கொலைக்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது. கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற பெண்ணுக்கு வரதட்சணையாக கொடுத்த காரின் மதிப்பு குறைவு என அவரின் கணவர் கொடுமை செய்ய, அதனால் விஸ்மயாவின் உயிர் பறிபோனது. அதுபோல கடந்த ஆண்டு வரதட்சணைக் கொடுமையின் உச்சகட்டமாக, பாம்பை கடிக்கவிட்டு உத்ரா என்ற பெண்ணை அவர் கணவர் கொலை செய்த அதிர்ச்சி அரங்கேறியது. ஏழை வீடுகள்முதல் வி.ஐ.பி குடும்பங்கள்வரை வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகிறது.
பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் குற்றங்கள் அதிகரித்ததை அடுத்து கேரளத்தில் வரதட்சணைக்கு எதிரான பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து அரசு ஊழியர்களும் `வரதட்சணை வாங்கவில்லை' எனச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது `வரதட்சணை வாங்கமாட்டோம்' என்ற உறுதிமொழிக் கடிதத்தை அனைவருக்கும் அனுப்பும் செயல்முறையை கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கிவைத்தார்.பட்டமளிப்பு விழாவில் பேசும் கவர்னர் ஆரிப் முகமது கான்
Also Read: வரதட்சணைக் கொடுமை: 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை; மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமித்த கேரளா!
இதற்கிடையில் வரதட்சணைக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார் கவர்னர் ஆரிப் முகமதுகான். இந்த நிலையில் கொச்சியில் நடந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கவர்னர், நகைக்கடைகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆரிப் முகமதுகான் பேசுகையில், ``நகைக்கடை விளம்பரங்களில் மணப்பெண்கள் போன்ற மாடல் புகைப்படங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தங்க நகைகள் என்றாலே மணமகள்தான் என தொடர்புபடுத்தி விளம்பரம் செய்யக்கூடாது. மணமகளுக்கு பதிலாக குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் புகைப்படங்களை பயன்படுத்தலாம்.கவர்னர் ஆரிப் முகமதுகான்
Also Read: `நகைகளை உன் பெற்றோரிடமே கொடுத்துவிடு!' - கேரள மணமக்களின் வரதட்சணை மறுப்பு திருமணம்
புதுமணப்பெண் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு நிற்பதுபோன்று நிறைய நகைக்கடைகளில் விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். வரதட்சணை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாற்றம் உதவும்" என்றார். மேலும் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களிடம் `வரதட்சணை வாங்கமாட்டோம்' என்ற உறுதிமொழியையும் கவர்னர் பெற்றார்.
http://dlvr.it/S5Zqfc
Friday, 13 August 2021
Home »
» ``விளம்பரங்களில் மணப்பெண் மாடல்கள் வேண்டாம் ப்ளீஸ்!" - நகைக்கடைகளுக்கு கேரள கவர்னர் அறிவுரை