மும்பை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் எப்போதும் தாமதம் செய்வது வழக்கம். இதனால் மாணவர்கள் சில நேரங்களில் மேற்படிப்புக்கு செல்வதில்கூட சிக்கல் ஏற்படுகிறது. நடப்பு ஆண்டிலும் மாணவர்களுக்கு குறிப்பாக இளங்கலை மாணவர்களுக்கு இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் கடந்த மாதத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தொடர்ச்சியாக இ-மெயில் அனுப்பிக்கொண்டிருந்தனர். அதில் அறிவியல், கலை இளங்கலைத் தேர்வு முடிவுகளை உடனே வெளியிடவில்லையெனில் மும்பை கலீனாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று அதில் மிரட்டல் விடுத்துள்ளனர். மாணவர்களின் இந்த மிரட்டல் குறித்து பல்கலைக்கழக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளனர்.
Also Read: மும்பை விமான நிலையத்துக்குள் எறியப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில்; தீவிரவாதிகள் சதியா என விசாரணை!மும்பை பல்கலைக்கழகம்
யார் இந்த இ-மெயில்களை அனுப்பியது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இமெயிலுக்கு போதிய அளவு பல்கலைக்கழகம் பதிலளிக்காத காரணத்தால் மாணவர்கள் தற்போது தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்திற்கு போன் மூலம் மிரட்டி வருகின்றனர். சிலர் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்புகின்றனர். கடந்த 4-ம் தேதி முதல் வெடிகுண்டு புரளி வந்தது. மாணவர்கள் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் மற்றும் இ-மெயில் மூலம் மிரட்டி வருவதால் பல்கலைக்கழகம் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதில் சிக்கல் இருந்து வந்தது.
இதே போன்று மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேயின் செயலாளருக்கு மொபைல் போனில் மிரட்டல் வந்துள்ளது. முதல்வரின் செயலாளர் மிலிந்த் நர்வேகரின் வாட்ஸ் ஆப்பிற்கு வந்துள்ள அந்த மிரட்டல் செய்தியில், 'சில குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, என்ஐஏ மூலம் விசாரணை நடத்துவோம்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மிலிந்த் நர்வேகர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் நேரில் சென்று எழுத்து மூலம் புகார் செய்துள்ளார். போலீஸார் யார் மிரட்டல் செய்தி அனுப்பியது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்று மர்ம நபர் மாநில தலைமை செயலகத்திற்கு போன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S5gc39
Sunday, 15 August 2021
Home »
» மும்பை:தேர்வு முடிவுகளை வெளியிடாவிட்டால் பல்கலைக்கழகத்தை வெடிவைத்துத் தகர்ப்போம்;இ-மெயிலில் மிரட்டல்