மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியில் இருந்த போது மும்பையில் உள்ள பீர் பார்கள், ஹோட்டல்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி மாமூல் வாங்கிக்கொடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான குற்றச்சாட்டை மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்திருந்தார், அதன் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அனில் தேஷ்முக்
அமலாக்கப்பிரிவும் அனில் தேஷ்முக் மீது பணமோசடி தொடர்பாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க 4 முறை அமலாக்கப்பிரிவு அனில் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை, இருந்தும் அவரை கைது செய்ய அமலாக்கப்பிரிவு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இவ்வழக்கில் புதிய திருப்பமாக சிபிஐ-யின் ஆரம்ப கட்ட விசாரணையில் அனில் தேஷ்முக்குக்கு எதிரான குற்றசாட்டில் உண்மை இல்லை என்பது போன்ற அறிக்கை சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிபிஐ அதிகாரிகள் இது எப்படி வெளியானது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சிபிஐ கீழ் மட்ட அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து இது போன்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தயாரித்து வெளியிட்டது தெரிய வந்துள்ளது.
Also Read: 'மகாராஷ்டிரா: 100 கோடி மாமூல் விவகாரம்! - மாஜி அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை வழக்கு'
இதில் அனில் தேஷ்முக் வழக்கறிஞருக்கும், மருமகன் கவுரவ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உடனே புதன்கிழமை இரவு இரண்டு பேரையும் சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்று இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு அனில்தேஷ்முக் வழக்கறிஞரை கைது செய்தனர். ஆனால் அனில் தேஷ்முக் மருமகனை விடுவித்தனர். கவுரவுக்கு இதில் எந்த வித நேரடித்தொடர்பும் இல்லை என்று கூறி அவரை போகச்சொன்னதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அனில் தேஷ்முக்
விசாரணையில் அனில் தேஷ்முக் வழக்கறிஞர் ஆனந்த், சிபிஐ அதிகாரி அபிஷேக் திவாரி என்பவரிடம் லஞ்சம் கொடுத்து போலியான விசாரணை அறிக்கையை தயார் செய்ய வைத்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அபிஷேக் திவாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கவுரவும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியில் வந்த போது 10 பேர் கொண்ட கும்பல் வந்து சட்டவிரோதமாக கவுரவை அழைத்து சென்றதாக தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப்மாலிக் குற்றம்சாட்டினார். எந்த வித விதிகளும் பின்பற்றப்படாமல் அழைத்து செல்லப்பட்டுள்ளார். நாட்டில் சட்டங்கள் அமலில் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியும் சிபிஐயின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/S6p88S
Thursday, 2 September 2021
Home »
» மும்பை: `ரூ.100 கோடி லஞ்ச வழக்கு; போலி விசாரணை அறிக்கை!’ -சிபிஐ அதிகாரி, வழக்கறிஞர் கைதால் பரபரப்பு