மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக விலை உயர்ந்த வைரத்தை வேட்டையாடும் நோக்கில் பல்வேறு சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்துத் தோண்டி வருகின்றனர். நீண்ட நாள்கள் கடின உழைப்புக்குப் பலனாக 8.22 கேரட் வைரத்தை செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கண்டடைந்தனர். ரத்தன்லால் பிரஜாபதி அவரது மூன்று கூட்டாளிகள் ஹிராபூர் தபரியான் என்னும் பகுதியில் கண்டெடுத்த இந்த வைரத்தின் மதிப்பு ரூபாய் 40லட்சம் ஆகும். இதனை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர். வருகின்ற 21-ம் தேதி நடைபெரும் ஏலத்தில் மற்ற வைரங்களுடன் சேர்த்து ஏலம் விடப்படும் எனவும் கூறுகின்றனர்.மாதிரி படம்
Also Read: `3 தலைமுறையாகத் தேடினோம்!' - வைரம் கிடைத்த சந்தோஷத்தில் கூலித் தொழிலாளி!
ஏலத்தின் மூலம் வரும் வருமானத்தில் அரசு ராய்ல்டி மற்றும் வரிகள் போக மீதி பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா தெரிவித்தார். சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளில் ஒருவரான ரகுவீர் பிரஜாபதி, "நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல சிறிய சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்து பணியாற்றி வந்தோம் ஆனால் இங்குதான் எங்களுக்கு வைரம் கிடைத்துள்ளது. கடந்த ஆறு மாதமாக ஹிராபூர் தபரியானில் பணியாற்றி வரும் எங்களுக்குச் சிறந்த விருந்தாக இது அமைந்துள்ளது".
சுரங்கதொழிலாளர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் சிறந்த வாழ்வையும் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர். மாநில தலைநகர் போபாலில் இருந்து 380 கி.மீ தூரத்தில் உள்ள பன்னாவில் 12 லட்சம் கேரட் வைரங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
http://dlvr.it/S7YGjF
Tuesday, 14 September 2021
Home »
» 15 ஆண்டு முயற்சிக்கு பலனாக 8.22 கேரட் வைரம்; மகிழ்ச்சியில் மத்திய பிரதேச தொழிலாளர்கள்!