15 வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஒருவர் சிறார் வதை செய்ததாகத் தொடுக்கப்பட்ட போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞருக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தோர் அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில், தன் மகளை யாரோ கடத்திவிட்டதாகக் கூறி உஜ்ஜெய்ன் மாவட்டத்தில் உள்ள மகித்பூர் காவல் நிலையத்தில் காணாமல்போன சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினரும் இதனைக் கடத்தல் வழக்காகப் பதிவு செய்தனர்.Girl - Representational Image
Also Read: போக்சோ வழக்கு: விடுவிக்கப்பட்ட குற்றவாளி; 7 ஆண்டுக்குப் பின் தண்டனை அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் காணாமல் போன அந்தச் சிறுமி கடந்த ஜூலை மாதம் சூரத் நகரில் கண்டறியப்பட்டார். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் 22 வயது இளைஞர் ஒருவருடன் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மன்டாசூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருவதும், சிறுமிக்கும் அந்த இளைஞருக்கும் இடையில் ஏற்பட்ட உறவின் மூலம் அச்சிறுமிக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
தனக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து சூரத் வரை அந்த இளைஞர் தன்னை அழைத்துச் சென்றதாகவும், தன்னிடம் அவர் உடல்ரீதியிலான தொடர்பை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாகத்தான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் காவல்துறையிடம் அச்சிறுமி கூறியிருக்கிறார்.
இதனையடுத்து கடத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வு ஆகிய குற்றங்களுக்காக அந்த 22 வயது இளைஞர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுக, நீதிமன்றமும் போக்ஸோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட இந்த இளைஞருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.Court (Representational Image)
Also Read: 16 ஆண்டுகளாக பாலியல் தொல்லை; புகார் அளித்த 23 மாணவிகள்; கும்பகோணம் பள்ளி ஆசிரியர் கைது!
`குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருடன் அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறியபோது அச்சிறுமிக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது என்றாலும், தனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் அவர் அந்த இளைஞருடன் சென்றிருக்கிறார் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த இளைஞருடன் அவர் தொடர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்போதைய வயது 15 தான் என்றாலும் தவறான தொடர்பில் இணையும்போது அதன் விளைவுகள் எவ்விதம் அமையும் என்பது 15 வயது சிறுமிக்குத் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது . அதேபோல தான் என்ன செய்கிறோம் என்பதை நன்கு அறிந்தே தனது பெற்றோருக்குத் தெரியாமல் அச்சிறுமி அந்த இளைஞருடன் வெளியேறியிருக்கிறார். எனவே குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அச்சிறுமியை அவரது பெற்றோருக்குத் தெரியாமல் கடத்திவிட்டதாகச் சொல்ல முடியாது’ என்று கூறிய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அந்த இளைஞருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
18 வயதுக்குக் கீழுள்ள சிறுவர், சிறுமிகளை சிறார் வதை செய்வது, பாலியல் செயல்களில் ஈடுபடுவது போக்ஸோ சட்டப்படி குற்றம். இன்னொரு பக்கம், பதின் பருவத்துக் காதல்களில், சம்பந்தப்பட்ட ஆண்கள் போக்ஸோ சட்டத்தால் தண்டிக்கப்படுவது பற்றிய குரல்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில்தான், இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்.
http://dlvr.it/S7q4nr
Saturday, 18 September 2021
Home »
» 15 வயது சிறுமி கர்ப்பம்; குற்றவாளிக்கு ஜாமின் அளித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நீதிமன்றம்!