லக்னோவில் 10-ம் வகுப்பு படிக்கும் அமன் யாதவ் என்ற மாணவன் சமீபத்தில் நடந்த தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தான். அவன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தான். காலையில் நடைபயிற்சிக்கு சென்ற அவனது தந்தை அகிலேஷ் தனது மகன் கடையில் நிற்பதைப் பார்த்து தேர்வில் குறைந்த மதிப்பெண் கண்டித்துள்ளார்.சித்தரிப்பு படம்
Also Read: மும்பை: மகளின் கராத்தே பெல்ட்; நீட் தேர்வுக்குப் படிக்கச் சொன்ன தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
நண்பர்கள் முன்னிலையில் தன்னைக் கண்டித்ததால் கோபம் அடைந்த அமன் நேராக தனது வீட்டிற்குச் சென்றார். தனது தந்தை வீட்டிற்கு வருவதற்கு முன்பாக வீட்டிற்குள் வந்து வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற தந்தையை சுட்டார். தோட்டா அகிலேஷ் தோள்பட்டையில் பாய்ந்தது. இதில் அகிலேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்த அமன் துப்பாக்கியை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அகிலேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பி ஓடிய அமனை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். அகிலேஷ் உறவினர்களின் வீடுகளில் தேடி வருகின்றனர். அகிலேஷ் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி வருகிறார். எனவே தனது பெயரில் துப்பாக்கி ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருந்தார் என்று போலீஸ் உதவி கமிஷனர் காஜிம் தெரிவித்தார். மேலும் அமனை பிடிக்க அவனது உறவினர்களின் உதவியை நாடி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
http://dlvr.it/S7vV7c
Monday, 20 September 2021
Home »
» `கடையில் நிற்காதே! போய் படி' கண்டித்த தந்தையை துப்பாக்கியால் சுட்ட 19 வயது மகன்!