இறந்தவர்களின் உடல்களை ரயில்களில் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வது வழக்கம். அது போன்று மும்பையில் இருந்து ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடல் காணாமல் போய்விட்டது. மும்பையில் வசிக்கும் குல்பாம் ஷேக் என்பவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தனது தாயாரை மும்பைக்கு அழைத்து வந்து தன்னுடன் வைத்திருந்தார். அவரது தாயார் சர்வாரி ஷேக்கிற்கு புற்று நோய் இருந்தது. இதற்காக டாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இதனால் குல்பாம் ஷேக் தனது தாயாரை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். தாயாரின் உடலை வாரனாசி செல்லும் ரயிலில் அனுப்பிவைத்தார். ரயிலில் ஏற்றப்பட்ட சவப்பெட்டி
Also Read: தலைமைக்காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! காவலர்கள் அதிர்ச்சி!
ரயில் வாரனாசி சென்றவுடன் குல்பாம் ஷேக் தனது உறவினர்களுடன் சென்று தனது தாயாரின் உடலை எடுக்கச் சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரயிலில் அனுப்பப்பட்ட உடல் காணாமல் போய் இருந்தது. இது குறித்து ரயில்வே போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர். மும்பையிலிருந்து வாரனாசி வரும் ரயில் தடம் முழுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் உள்ள மைஹர் என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வாரனாசியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நடந்த சம்பவத்திற்கு இறந்த பெண்ணின் உறவினர்கள்தான் காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். உடல் ஏற்றப்படும் பெட்டியில் உறவினர் ஒருவர் இருக்கவேண்டும் என்பது விதியாகும். ஆனால் இதில் உறவினர் யாரும் உடல் இருந்த பெட்டியில் இல்லை. எனவே ரயில் வேகமாக சென்றபோது சவப்பெட்டி நகர்ந்து நகர்ந்து கீழே விழுந்துவிட்டது என்று தெரிவித்தனர். ஆனால் ரயில்வேயின் கவனக்குறைவு காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருப்பதாக குல்பாம் ஷேக் தெரிவித்தார். நடந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
http://dlvr.it/S7brqc
Wednesday, 15 September 2021
Home »
» ரயிலில் அனுப்பப்பட்ட பெண் உடல் மாயம்; 200 கிலோமீட்டர் தூரத்தில் மீட்பு!