ஒருபக்கம் கொரோனா தொற்று பாதிப்பு கேரளாவில் குறையாத வேளையில், தற்போது அங்கே நிபா வைரஸும் பரவ ஆரம்பித்திருக்கிறது. கேரளாவிலேயே கோழிக்கோடு மாவட்டத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க இதே கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் தற்போது மரணமடைந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.நிபா வைரஸ்
Also Read: நிபா வைரஸ்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவர் மரணம்!
இந்நிலையில், தமிழகத்திற்கு அண்டைமாநிலமான கேரளாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் மக்களில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் அறிவுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக கேரளாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள கேரளாவை இணைக்கும் சாலைகளில் மிகுந்த விழிப்புடன் செயல்படவேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட துணை பொது சுகாதார இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
மிகக் குறிப்பாக இந்த இணைப்புச் சாலைகள் அனைத்திலும் 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவக் குழுவை கண்காணிப்புப் பணியில் அமர்த்தவேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌவால்கள் மற்றும் பன்றிகளிடமிருந்தோ, அழுகிப்போன உணவுகளிலிருந்தோ நிபா வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்தும் மற்றொருவருக்கு இந்த நோய் பரவும். Bats (Representational Image)
Also Read: நிபா வைரஸ்: `தரையில் கிடக்கும் ரம்புட்டான் பழங்களைச் சாப்பிட வேண்டாம்!' - கேரள அரசு அறிவுறுத்தல்
இந்த நோய்த்தொற்றுக்கென்று பிரத்யேக சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ கிடையாது. நோயாளிக்கு சப்போர்ட்டிவ் கேர் (SUPPORTIVE CARE) மட்டுமே கொடுக்க முடியும்.
உலகிலேயே முதன்முறையாக 1999-ம் ஆண்டு மலேசியாவில்தான் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக அங்குள்ள பன்றி வியாபாரம் செய்பவர்களிடையே இந்த நோய்த்தொற்று காணப்பட்டது. அதேபோல 2001-ம் ஆண்டு வங்கதேசத்திலும் இந்த வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டுதான் கேரளாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில்தான் தொற்றுப் பரவல் அப்போது இருந்தது. அதுமட்டுமல்லாமல் 17 பேர் இந்த நிபா நோய்த்தொற்றுக்கு அப்போது உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S761q8
Tuesday, 7 September 2021
Home »
» நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக - கேரள சாலைகளில் 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்புக் குழு