தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 28.36 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதற்கு தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 18-44 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு 16,00,195 தடுப்பூசிகளும், 45 – 60 வயதுக்குட்பட்டோருக்கு 8,69,741 தடுப்பூசிகளும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3,47,164 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ கோவிட் 19- யை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் இன்று 25 இலட்சத்துக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்திய சாதனை, இதுவரை 4 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இமாலய சாதனை. #COVID19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை! — M.K.Stalin (@mkstalin) September 12, 2021 மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி! தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!” என தெரிவித்திருக்கிறார் இதனைப்படிக்க: “மன அழுத்தம் போக்கும் மாமருந்து” – ‘புன்னகை புயல்’ வடிவேலு பிறந்தநாள் இன்று..!
http://dlvr.it/S7S7MH
Monday, 13 September 2021
Home »
» தமிழ்நாட்டில் ஒரே நாளில் 28 இலட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்