செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரேனா நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து பல தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், வல்லிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1 மாணவிக்கும், செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கும், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளியில் 1 மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுராந்தகம் அரசு உதவி பெறும், இந்து மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S74vY2
Tuesday, 7 September 2021
Home »
» செங்கல்பட்டு: 5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி