தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு - தனியார் கல்லூரிகளையும் மாணாக்கர் மற்றும் ஊழியர்களின் விடுதிகளையும் திறக்க அனுமதித்துள்ளது. மாணவ - மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகம் இதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி போட தவறிய கல்லூரி மாணவ - மாணவியர் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி - கல்லூரி மாணாக்கர் அரசுப் பேருந்துகளில் பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையும் படிக்கலாம்: கொரோனா தடுப்பு: பள்ளிகளில் மாணாக்கர்கள் செய்யக்கூடியவையும் கூடாதவையும்!
http://dlvr.it/S6jvpl
Wednesday, 1 September 2021
Home »
» கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு