கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், சிறுவனிடம் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வௌவால்
நிபா மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "நிபா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்டத்தில் முழுவீச்சில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று தாக்கம் உள்ளதால், அருகிலுள்ள மாவட்டமான நமது மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் முழுவீச்சில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read: நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக - கேரள சாலைகளில் 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்புக் குழு
மேலும் நிமோனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு வருபவர்கள் சோதனைச் சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். கேரளா மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் கொரோனா இல்லை என ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.nilgiris collector innocent divya
நீலகிரி மாவட்டத்தில் 98 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2, 3 நாட்களில் மீதமுள்ள பொதுமக்களும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்ட மாவட்டமாக மாறும். இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
http://dlvr.it/S7K4N4
Friday, 10 September 2021
Home »
» நிபா வைரஸ்: `காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், திருப்பி அனுப்பப்படுவார்கள்!’ - நீலகிரி ஆட்சியர்