அமெரிக்க ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான பட்டத்தை பிரிட்டனைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய எம்மா ராடுகானு வென்றுள்ளார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த லேலா ஃபெர்ணாண்டஸை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அவர் வென்றார். இதன் மூலம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் க்ராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் பட்டத்தை வெல்லும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும் எம்மா ராடுகானு பெற்றார். 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெண்கள் டென்னிஸில் முக்கியப் போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வயதுடைய பெண் என்ற சாதனையும் எம்மாவின் வசமாகியது. சில மாதங்களுக்கு முன் தரவரிசையில் 150ஆவது இடத்தில் இருந்த எம்மா ராடுகானு, 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் போட்டியில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் எம்மா படைத்துள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ள எம்மாவிற்கு பிரிட்டன் இளவரசர் சார்லஸ், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/S7PsxK
Sunday, 12 September 2021
Home »
» அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் இளம் வீராங்கனை எம்மா ராடுகானு