பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் டிவி நேர்காணலின் போது பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் ஜாவேத் அக்தரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி கடந்த நவம்பர் மாதம் மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஜாவேத் அக்தர் இம்மனுவை தாக்கல் செய்தார். `கங்கனாவின் நேர்காணல் தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் கங்கனா மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
பிப்ரவரி மாதத்தில் இருந்து கங்கனா கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கங்கனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. அந்தேரி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடைபெற்ற அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கங்கனா ரணாவத்
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 9ம் தேதி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கங்கனா விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக கோரி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்த போதும் கங்கனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. கங்கனா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கங்கனாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்தார். படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார். உடனே அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பிப்ரவரி மாதத்தில் இருந்து கங்கனா எதாவது ஒரு காரணத்தை கூறி கோர்ட்டில் ஆஜராக மறுத்து வருவதாக’ தெரிவித்தார்.
Also Read: "மக்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்!"- `தலைவி' கங்கனா ரணாவத்
கங்கனாவின் மருத்துவ சான்றிதழை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.ஆர்.கான் இம்முறை கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிப்பதாகவும், அடுத்த முறை ஆஜராகவில்லையெனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
http://dlvr.it/S7bMvd
Wednesday, 15 September 2021
Home »
» கங்கனா ரணாவத்: `அடுத்தமுறை ஆஜராகாவிடில் கைது வாரண்ட்!’ - மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை