ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில்,காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த ஆப்கனின் சூழல் வழிவகுக்கும் அபாயம் உள்ளது. ஆப்கனில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்து விடும். ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்றுள்ளார். எஸ்.சி.ஓ.வில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள் உள்ளன.
http://dlvr.it/S7p2H1
Saturday, 18 September 2021
Home »
» "ஆப்கன் சூழல் அண்டை நாடுகளை பாதிக்கும்" - பிரதமர் மோடி பேச்சு