கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மாற்றுத்திறனாளிகளான தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் ரேவதியின் வீட்டு சமையல் அறையில் ஆரியநாடு பகுதியை சேர்ந்த அருண்(28) என்ற இளைஞர் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கிருந்த ரேவதியின் தாயின் வாயைப் பொத்தி கீழே தள்ளியுள்ளார். சத்தம்கேட்டு அங்கு வந்துள்ளார் ரேவதி. அருண் ரேவதியை அடித்து கத்தியால் குத்தியிருக்கிறார். மயங்கி தரையில் சாய்ந்தார் தேரவதி. அவரைக் காப்பாற்ற முயன்ற அவருடைய தாயின் கையிலும் கத்துக்குத்து விழுந்தது. அருண் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சமயத்தில் ரேவதியின் தந்தையையும் தாக்கியிருக்கிறார்.
Also Read: மன்னார்குடி: நண்பர்களால் கொலை செய்யப்பட்ட மாணவர்; விபரீதத்துக்கு மொபைல் கேம் காரணமா?கைது செய்யப்பட்ட அருண்
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு கூடினர். ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ரேவதி மற்றும் அவரது பெற்றோரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வீட்டில் இருந்து தப்பியோட முயன்ற அருணை விரட்டியுள்ளனர். அருகில் உள்ள வீட்டு மாடியில் ஏறி தப்பி ஓட முயன்ற அருணை அப்பகுதி மக்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரேவதி இன்று காலை உயிரிழந்தார்.
அருண் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ரேவதியும், அருணும் ஏற்கனவே காதலித்துள்ளனர். ஆனால் ரேவதி வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால் நேரில் பார்க்கும்போது ரேவதியிடம் அருண் தகராறு செய்வது வழக்கம். ஒருமுறை ரேவதி மற்றும் அவரது தாயிடமிருந்து மொபைல் போனைப் பறித்துள்ளார் அருண். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆரியநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அருணை எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில் அருண் இவ்வாறு நடந்துகொண்டான்" என்றனர்.கொலை செய்யப்பட்ட ரேவதி
அருண் தனது வாக்குமூலத்தில், "என்னை போலீஸார் எச்சரித்து அனுப்பியபிறகு ரேவதி என் ஊருக்கு வந்து என்னைப்பற்றி தவறாக ஊர் மக்களிடம் கூறினார். ரேவதியை நான் காதலித்தது அனைவருக்கும் தெரியும் என்பதால் எனக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தள்ளிப்போனது. அந்த ஆத்திரத்தில் இவ்வாறு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார். அருண் மீது ஏற்கெனவேவ பல காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
http://dlvr.it/S6pllx
Thursday, 2 September 2021
Home »
» ``எனக்குத் திருமணம் நடக்காததால் கத்தியில் குத்தினேன்!" - திருமணமான காதலியைக் கொலை செய்த இளைஞர்!