கேரள மாநிலம் கோட்டயம் பாலா மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் லவ் ஜிகாத் மற்றும் நார்கோட்டிக் ஜிகாத் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்பினார். இது அரசியல் விவாதமான நிலையில் லவ் ஜிகாத், நார்கோட்டிக் ஜிகாத் கேரளத்தில் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ``பாலா பிஷப்பின் பிரசங்கம் அனாவசியமானது. காதலையும், போதை மருந்தையும் ஒரு மதத்திற்கானது எனக் கூறுவது சரியல்ல. இதன் பெயரில் விவாதத்தை ஏற்படுத்தி பிரச்னை உருவாக்கலாம் என நினைத்தால் அது நடக்காது. கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மக்கள் மாற்றப்படுவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மதமாற்றம் செய்து ஐ.எஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சேர்ப்பதாக நடக்கும் பிரசாரங்களின் யதார்த்தம் குறித்து ஆராய்ந்தோம். இளைஞர்களிடையே தீவிரவாத எண்ணம் ஏற்படாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. நார்கோட்டிக் ஜிகாத் குறித்து அடிப்படை ஆதாரமில்லை. பாலா பிஷப்பின் கருத்து துரதிஷ்டமானது. சிலர் அதை விவாதமாக்க முயற்சித்தனர். அவர்களது பிரசாரத்தில் உண்மைத் தன்மை இல்லை.
Also Read: `லவ் ஜிகாத் மட்டுமல்ல; போதை ஜிகாத்தும் உண்டு!’ - கேரள அரசியலில் விவாதத்தைக் கிளப்பிய பிஷப் கருத்துபிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்
கேரளத்தில் மதமாற்றம், போதை மருந்து கடத்தல் குறித்து ஆராய்ந்தபோது அதில் சிறுபான்மை மதங்களுக்கு பிரத்யேக பங்கு இல்லை என்பதை அறியமுடியும். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றப்படுவதாக கூறுவது அடிப்படை ஆதாரம் அற்றது. கட்டாய மதம்மாற்றம் குறித்து புகார்களோ, தெளிவான விபரங்களோ கிடைக்கப்பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த அகிலா ஹாதியா என்ற பெயரில் இஸ்லாம் மதத்திற்கு மாறியது நிர்பந்தத்தின் பேரில் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஐ-கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அது தவறானது எனத் தெளிவுபடுத்தியது.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றி அவர்களை ஐ.எஸ் உள்ளிட்டவைகளில் இணைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசரித்த போது மற்றொரு விஷயம் வெளியே வந்தது. 2019 வரை ஐ.எஸ்-ல் சேர்ந்த நூறு பேரில் 72 பேர் கேரளத்தில் இருந்து வேலை, தொழில் சம்பந்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐ.எஸ் சித்தாந்தத்தை ஏற்று அதில் இணைந்திருக்கிறார்கள். அதில் கோழிக்கோடு துருத்தியாடைச் சேர்ந்த தாமோதரனின் மகன் பிரஜூ தவிர மற்ற அனைவரும் பிறப்பாலே இஸ்லாமியர்கள். மற்ற 28 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு கேரளத்தில் இருந்து சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 28 பேரில் ஐந்துபேர் மட்டுமே மற்ற மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாற்றப்பட்ட பிறகு ஐ.எஸ் அமைப்பிற்கு சென்றுள்ளனர்.கேரள முதல்வர் பினராயி விஜயன்
அதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிமிஷா என்ற இந்து மததைச் சேர்ந்த இளம்பெண் பாலக்காட்டைச் சேர்ந்த பெக்ஸன் என்ற கிறிஸ்தவ இளைஞரையும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மெரின் ஜேக்கப் என்ற கிறிஸ்தவ இளம் பெண் பெஸ்டின் என்ற கிறிஸ்தவ இளைஞரையும் திருமணம் செய்தபிறகுதான் இவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததும் நடைபெற்றது. அதுபோல நார்கோட்டிக் ஜிகாத் என்பதும் அடிப்படை ஆதாரம் இல்லாதது. 2020-ல் பதிவு செய்யப்பட்ட நார்க்கோட்டிக் வழக்குகளில் 49.8 சதவிகிதம் குற்றவாளிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். 34.47 சதவிகிதம் இஸ்லாமி மதத்தையும், 15.77 சதவிகிதம் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்த குற்றவாளிகள் ஆவார்கள். எனவே கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முயல்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்றார்.
http://dlvr.it/S86YFg
Thursday, 23 September 2021
Home »
» ``லவ் ஜிகாத், நார்கோட்டிக் ஜிகாத் கேரளத்தில் இல்லை" விளக்கம் கொடுத்த பினராயி விஜயன்!