கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாநிலங்கள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு இருந்த ஒருங்கிணைந்த ஆந்திராவை ஒன்றிணைத்து வைத்திருக்கும் சக்தி படைத்த கடைசி மனிதராக அறியப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும், ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்த ஜெகன், ஆந்திரா முழுவதும் 3,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு ஆந்திரா மக்களைச் சந்தித்து வந்தார்.Y. S. Rajasekhara Reddy
காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகக் காங்கிரஸிலிருந்து விலகி 2012-ம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்று தனது தந்தையின் பெயரில் கட்சியினைத் தொடங்கினர். அவரின் தாயார் விஜயலட்சுமி, விஜயாம்மா என்று எல்லோராலும் அறியப்பட்டவர். இந்த கட்சியின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான ஜெகன் ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் இருந்தார். இந்த காலகட்டத்தில், ஜெகனின் தாயாரும், தங்கை ஷர்மிளாவும் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். தெலங்கானா என்ற புதிய மாநிலம் பிரிவதை எதிர்த்து சிறையில் ஜெகனும், வெளியில் விஜயம்மாவும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
Also Read: தெலங்கானாவில் ஜெகன் தங்கை ஷர்மிளாவின் புதிய கட்சி... ஸ்கெட்ச் கே.சி.ஆருக்கா பா.ஜ.க-வுக்கா?
கடந்த 2014-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனது முதல் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. இந்த தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான அரசு அமைந்தது. ஜெகன் எதிர்க்கட்சி தலைவரானார். 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குக் கடுமையாக உழைத்த ஜெகன் மாநிலம் முழுவதும் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயணம் மேற்கொண்டார். செல்லும் இடமெல்லாம், ``ஜெகன் வரவேண்டும். எங்களுக்கு ஜெகன் வேண்டும்" என்ற முழக்கங்கள் மேலோங்கியது. தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்து ஜெகன் முதல்வரானார்.ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவின் முதல்வராக ஜெகன் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் அவர்களின் குடும்பத்திற்குள் புகைந்துகொண்டிருந்த அரசியல் சண்டை இப்போது பற்றி எரிவதாகக் கூறப்படுகிறது. ஜெகன் முதல்வரானதும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் தலையிடுவதை விரும்பவில்லை. விஜயாம்மா கௌரவத் தலைவராக இருந்த போதிலும் பெரும்பாலும் எந்த அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை. இதற்கும் ஜெகனின் உத்தரவு தான் காரணம் என்கிறார்கள். ஷர்மிளா மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டபோதும் அது மறுக்கப்பட்டதாம். ஜெகன் இல்லாத நேரத்தில் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கப் பாடுபட்ட இருவருமே கட்சியில் ஓரம்கட்டப்பட்டனர்.
Also Read: `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' - புதுக் கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா!
இதனால், அதிருப்திக்கு இருந்த ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். சொன்னபடி தனது தந்தையில் பெயரிலேயே ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். கட்சி ஆரம்ப விழாவில் விஜயாம்மாவும் பங்கேற்றார். தங்கையின் இந்த செயல்பாடு ஜெகனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது ஷர்மிளா ஜெகனை நேரில் சந்தித்து ராக்கி கட்டுவது வழக்கும். இந்த ஆண்டு ட்விட்டரில் மட்டுமே வாழ்த்து தெரிவித்திருந்தார்.ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா
அதுமட்டுமில்லாது, கடந்த செப்டம்பர் 02-ம் தேதி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர்-ருக்கு நினைவஞ்சலி கூட்டம் ஒன்றினை விஜயாம்மா ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், தந்தையின் நினைவிடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திரா முதல்வரும் தனது மகனுமான ஜெகன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக, கடப்பா மாவட்டம் புலிவெந்துலா-வில் உள்ள ஒய்.எஸ்.ஆர்-ரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். இதனால் அவர்களுக்குள் இருக்கும் விரிசல் வெளிச்சமானது.
இதுகுறித்து ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ரவிச்சந்திர ரெட்டியிடம் பேசினோம். ``ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவருக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். ஒரே போன்ற கருத்துக்கள் இருக்கவேண்டும் என்பது இல்லையே. ஷர்மிளா தெலங்கானாவில் கட்சி ஆரம்பிப்பது குறித்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசும்போது `நான் ஆந்திராவிலேயே இருக்க விரும்புகிறேன். ஆந்திராவின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். இங்குள்ள சவால்களை எல்லாம் கடந்து ஆந்திராவின் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்' என்று கூறிவிட்டார். ஜெகன்மோகன் தெலங்கானாவில் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதை விரும்பவில்லை. குடும்பமாக அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. குடும்பம் வேறு கட்சி வேறு" என்றார்.ரவிச்சந்திர ரெட்டி
மேலும், ``தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் மிகவும் பிரபலமானவர். அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று ஷர்மிளா எண்ணுகிறார். அங்குள்ள மக்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். ஷர்மிளாவும் தனது தந்தையைப் பின்பற்றி தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்தியாவில் விருப்பப்படும் யார் வேண்டும் என்றாலும் கட்சி தொடங்கலாம். அது அவர்களின் சொந்த விருப்பம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு கட்சியில் இருப்பது புதிதொன்றும் இல்லையே. அம்மா என்றைக்குமே அம்மா தான். அந்த கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் இதுவரை கிடையாது. விஜயாம்மா ஒய். எஸ்.ஆர் காங்கிரஸில் பதவி வகிக்கின்றார். அம்மா என்ற முறையில் அந்த கட்சி தொடக்கவிழாவில் அவர் பங்கேற்றுள்ளார். அதைத் தவிர வேறொன்றும் இல்லை" என்று கூறினார்.
Also Read: ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் டு ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு
ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆந்திராவில் உள்ள அரசியல் விமர்சகர் ரவியிடம் பேசினோம். ``ஜெகன்மோகன் குடும்பத்தில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. அதே சமயத்தில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினை தெலங்கானாவில் விரிவாக்கம் செய்யவும் அவருக்கு விருப்பம் இல்லை. ஜெகன் தெலங்கானாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை ஷர்மிளாவை வைத்து ஒரு முன்னோட்டம் பார்க்கிறார் என்று தான் தோன்றுகிறது. தெலங்கானாவில் நடைபெறும் சூழலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ்வின் தலைமையிலான தெலங்கானா இராட்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2023-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ்வின் அரசின் மீது சிறிய அதிருப்தி நிலவுகிறது. பல்வேறு கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்" என்றார்.அரசியல் விமர்சகர் ரவி
மேலும், ``ஒய். எஸ்.ஆர்-க்கு தெலங்கானா மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. இம்முறை தெலங்கானாவில் பா.ஜ.க-வுக்கு பெருமளவு வாய்ப்பு கிடையாது. இங்குக் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எண்ணிக்கையிலான வாக்கு வாங்கி உள்ளது. இம்முறை ஷர்மிளா தேர்தலைச் சந்தித்தால், காங்கிரஸ் ஓட்டு ஷர்மிளா பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம். இங்குள்ள கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் ஒட்டு ஷர்மிளாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஒவைசி-யும் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தைக் கொண்டுள்ளார். அவர்களின் செயல்பாடுகளும் கவனிக்கத்தக்கது. ஷர்மிளா, விஜயாம்மா இருவருமே ஏற்கனவே செல்வாக்கு பெற்றவர்கள் தான். இவர்களோடு பவன் கல்யாண், சிரஞ்சீவி போன்ற யாரேனும் இணைந்தால் வரும் தேர்தலில் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு மிக அதிகம்" என்றார்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் ஆந்திர அரசியலில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் ஜெகன். இந்நிலையில் தெலங்கானாவில் தன்னுடைய கட்சியை விரிவாக்கம் செய்வதில் ஜெகனுக்கு உடன்பாடு கிடையாது. அதே நேரத்தில், சமீப காலமாக தொடர்ச்சியாகத் தெலங்கானாவில் உள்ள ரெட்டி சமூகத்தினர் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியும் பலவீனமாகி வருகிறது. தெலங்கானாவில் பெரும்பான்மையைப் பெற பாஜக பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழக பாஜக தலைவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட விஷயமும் பேசப்பட்டது. ஷர்மிளா, விஜயாம்மா
தெலங்கானா பாஜகவின் கைகளில் சென்றுவிடுவதை விரும்பாத ஜெகன் தன் தங்கையைக் களமிறக்கி உள்ளார். ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கியதற்குப் பின்னால் ஜெகனுக்கு மிக முக்கிய பங்கு இருக்கும் என்றே ஆந்திரா, தெலங்கானா அரசியலை நன்கு கவனித்துவரும் தமிழக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஷர்மிளா பாஜகவில் பி-டீம்மாக தான் தெலுங்கானாவில் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், வேறு எந்த கட்சிக்காகவும் நான் வரவில்லை. மேலும் இந்த கட்சி வேறு எந்த கட்சியின் கீழும் ஒன்று சேராது என்று அழுத்தமாகக் கூறி அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஷர்மிளா.கைது செய்யப்பட்ட ஷர்மிளா ஷர்மிளா
இது அனைத்தும் நாடகமா என்ற சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, ஷர்மிளா தெலங்கானாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருதோடு அங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார். சமீபத்தில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஆறு வயது சிறுமிக்கு நீதிகேட்டு சிங்கரேணி காலனி பகுதியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடக் கோரிய நிலையிலும் போராட்டம் தொடரப்பட்டதினால், காவல்துறையினர் ஷர்மிளாவைக் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்ற கண்டன போராட்டத்திலும் கைது செய்யப்பட்டார். நாளுக்கு நாள் தெலங்கானாவில் ஷர்மிளாவின் அரசியல் இமேஜ் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
http://dlvr.it/S8Hv0q
Saturday, 25 September 2021
Home »
» `அண்ணன் - தங்கை - விஜயாம்மா’ ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் என்ன நடக்கிறது?! -அரசியல் சண்டையா, நாடகமா?