மும்பையின் மேற்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள தீன்தோஷி நீதிமன்றத்துக்குள் கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் 2-ம் தேதி ஓம்பிரகாஷ் பாண்டே என்பவர் வழக்கறிஞர்களுக்கான கோட் அணிந்து, வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். ``நான் கடவுள் கிருஷ்ணர் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என்று சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறார். ``எனக்கு அநீதி இழைத்தவர்கள் கோர்ட்டில் இருக்கின்றனர். வழக்கறிஞர்கள் வழக்கில் வாதாட அதிகப்படியான பணம் வசூலிக்கின்றனர். ஆவணங்களைக் கொடுக்க கோர்ட் கிளார்க்கூட பணம் கேட்கிறார்" என்று சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறார். இதனால் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டே பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென தன்னிடமிருந்த புல்லாங்குழலை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார். வழக்கறிரின் கோட்டுடன் பாண்டே
Also Read: நீலகிரி: தீர்ப்பு நேரத்தில் மாயமான குற்றம்சாட்டப்பட்டவர்! - தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி
அந்தப் புல்லாங்குழல் நீதிபதிமீது படாமல் அவர் அருகில் அமர்ந்திருந்த ஸ்டெனோகிராபர் மீது பட்டது. இதில் ஸ்டெனோகிராபர் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து பாண்டே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டதிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாண்டேயை கடந்த வாரம் சிறையில் இருந்தபடியே நீதிபதியுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ``எனது சகோதரன் கொலை செய்யப்பட்டதால் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தேன். எனது தவற்றை உணர்ந்துவிட்டேன். எனக்குத் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பாண்டே சார்பாக ஆஜரான வழக்கறிஞரும், தனது மனுதாரருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதை மற்றவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ``குற்றவாளி குற்றத்தில் ஈடுபட ஏற்கெனவே திட்டமிட்டு கோர்ட்டுக்குள் வந்திருக்கிறார். எனவே குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். அதோடு குற்றவாளி பயன்படுத்திய புல்லாங்குழல் மற்றும் வழக்கறிஞர் கோட் போன்றவற்றை மேல் முறையீடு முடிந்த பிறகு அழித்துவிட வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகையில் 5,000 ரூபாயை பாதிக்கப்பட்ட ஸ்டெனோகிராபருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
http://dlvr.it/S8417Q
Wednesday, 22 September 2021
Home »
» `நான்தான் கடவுள் கிருஷ்ணர்' கோர்ட்டில் நீதிபதி மீது புல்லாங்குழலை வீசிய நபர்; நடந்தது என்ன?