கேரள மாநிலம் திருச்சூர் போலீஸார் தன்னையும், தன் மகளையும் அவமானப்படுத்தியதாக, கடை நடத்திவரும் வியாபாரி அனில் என்பவர் ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``திருச்சூர் சேர்ப்பில் பகுதியில் நான் கடை வைத்திருக்கிறேன். அங்கு வந்த சேர்ப்பில் காவல் நிலைய எஸ்.ஐ என் மகளிடம் மோசமாக நடந்துகொண்டார். எங்களிடம் கெட்டவார்த்தைகளை பேசி அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டார்" எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து நீதிமன்றம் திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், மனுதாரரும் அவரின் மகளும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் விதிகளை மீறியதாக திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனுவை விசாரித்த கோர்ட், மாவட்ட கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையில் ஆதாரங்களைச் சமர்பிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியது.கேரள ஐகோர்ட்
Also Read: வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!
மேலும், `சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதி கண்டோன்மென்ட் ஸோன் ஆக இருந்ததா, லாக்டெளன் அமலில் இருந்ததா என்ற விபரங்கள் அறிக்கையில் இல்லை. எனவே கூடுதல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அந்தக் கூடுதல் அறிக்கை கடந்த மாதம் 25-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ``பொதுமக்களிடம் காவல் துறையினர் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். இது குறித்து டி.ஜி.பி சர்க்குலர் வெளியிட வேண்டும்'' என உத்தரவிட்டார்.மேலும், கேரள ஐகோர்ட் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறுகையில், ``கொரோனா லாக்டெளன் காலத்தில் காவல்துறையின் வன்முறை அதிகரித்துள்ளதாக பரவலாகப் புகார்கள் வருகின்றன. பொதுமக்களை `எடா', `எடி' என போலீஸார் அழைக்கக்கூடாது. போலீஸின் முன்பு வருபவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்லர். அவர்களை குற்றவாளிகள் போல நடத்தாதீர்கள்.Court- Representational Image
Also Read: கேரளாவை அதிரவைத்த வீடியோ; போலீஸ் லாக் செய்த காருக்குள் கதறிய 3 வயது குழந்தை! - நடந்தது என்ன?
தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலர்களின் மோசமான செயல்பாட்டை பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவலர்கள் தங்கள் நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/S72fVH
Monday, 6 September 2021
Home »
» ` எடா, எடி என அழைக்க பொதுமக்கள் குற்றவாளிகள் அல்லர்!' - காவல்துறையை கண்டித்த கேரள உயர்நீதிமன்றம்