கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் முப்பதாயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எடுத்திருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவரவேண்டும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் இதற்காக சுகாதாரத்துறையினர் சோதனை நிலையம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய பெரியதும், சிறியதுமாக சுமார் 37 வழிதடங்கள் உள்ளன. அதில் மூன்று முக்கிய எல்லை வழித்தடங்களில் மட்டுமே கண்காணிப்பு நடக்கிறது. ஆனால் மற்ற சாலைகளில் எந்தவித சோதனையும், கட்டுப்பாடும் இல்லாததால் கேரளாவைச் சேர்ந்தவர்கள் சர்வசாதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர்.தமிழக - கேரள எல்லை
Also Read: தீவிரத் தொற்றில் கேரளா... தயார்நிலையில் இருக்கிறதா தமிழகம்?
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் கேரள வாகனங்களை காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ஆகிய மூன்று எல்லை பகுதிகளில் மட்டுமே காவல் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், குமரி மாவட்டத்துக்கு நுழையும் கண்ணுமாமூடு, செறியகொல்லா, புலியூர் சாலை, படந்தாலுமூடு, கோழி விளை, ஆறுகாணி, செறுவாரக்கோணம், ஊரம்பு உள்ளிட்ட சாலைகளில் எந்தவித கண்காணிப்பும் இல்லை. இதனால் அந்த சாலைகள் வழியாக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர் என்கிறனர் அந்தப் பகுதி மக்கள்.
இதனால் தமிழகத்தில் எளிதில் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே நேரடியாக பேருந்து போக்குவரத்து இல்லை. தமிழகப் பேருந்துகள் மாவட்டத்தின் எல்லை வரை செல்லும், கேரள பேருந்துகளும் தமிழக எல்லைவரை வந்து திரும்பிச் சென்றுவிடும். கேரளத்தில் இருந்து பேருந்து மூலம் வரும் பயணிகள் நடந்தும், ஆட்டோக்கள் மூலமும் தமிழகத்துக்குள் வருகின்றனர்.எளிதில் எல்லை தாண்டும் கார்கள்
நடந்து செல்பவர்களையும், ஆட்டோக்களில் செல்பவர்களையும் எல்லையோர சோதனைச் சாவடிகளில் சோதனை செய்வது இல்லை எனக்கூறப்படுகிறது. எனவே கேரளவாசிகள் எளிதில் தமிழகத்துக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவில் இருந்து தமிழகம் வரும் எல்லையோர அனைத்து சாலைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
http://dlvr.it/S6zdWt
Sunday, 5 September 2021
Home »
» திறந்து கிடக்கும் தமிழக - கேரள எல்லைகள்; பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்?!