தினசரி கொரோனா பாதிப்பு முப்பதாயிரம் என்ற நிலை கேரளத்தில் இருந்தது. இப்போது தினசரி பாதிப்பு 20,000-க்கும் குறைவாக ரிப்போர்ட் ஆகிறது. நேற்றைய நிலவரப்படி கேரள மாநிலத்தில் 16,671 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14,272 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 4,73,920 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த தினத்தில் 120 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கேரளத்தில் மொத்த கொரோனா மரணம் 24,248 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்து கேரளம் முழுவதும் தற்போது 16,65,154 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,23,772 பேர் கொரோனா பாதித்து பின்னர் குணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளில் சில தளவுகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.கேரள முதல்வர் பினராயி விஜயன்
Also Read: ``லவ் ஜிகாத், நார்கோட்டிக் ஜிகாத் கேரளத்தில் இல்லை" - விளக்கம் கொடுத்த பினராயி விஜயன்!
அதில் குடிமகன்கள் குதூகலிக்கும் வகையில் இரண்டு டோஸ் வாக்சின் எடுத்துக்கொண்டவர்கள் பார்களில் அமர்ந்து மது குடிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு டோஸ் வேக்ஸின் எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி-பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் செல்லும் குடிமகன்களுக்கு மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை புதிய அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "இரண்டு டோஸ் வாக்சின் எடுத்துக்கொண்டவர்கள் பார்களிலும், ஓட்டல்களிலும் உள்ளே அமர்ந்து சாப்பிடலாம். இரண்டு டோஸ் வாக்சின் போட்ட தொழிலாளர்களை இந்த ஸ்தாபனங்களில் வேலையில் ஈடுபடுத்த வேண்டும். ஓட்டல் மற்றும் பார்களில் ஐம்பது சதவீதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். இண்டோர் ஸ்டேடியம், நீச்சல் குளங்கள் திறக்கலாம். அதில் பயிற்சி அளிப்பவர்களும், பயிற்சி எடுத்துக்கொள்பவர்களும் இரண்டு டோஸ் வாக்சின் எடுத்துக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவற்றில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாக்சின் பற்றிய பிரச்னை இல்லை.கொரோனா தடுப்பூசி
இன்னும் சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களுக்குப் பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களின் டிரைவர்கள் குறைந்தது பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். மாணவர்கள் பாதுகாப்புக்காக ஒரு ஆசிரியர் தனியாக நியமிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் மாணவர்களை கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
http://dlvr.it/S8MD4W
Sunday, 26 September 2021
Home »
» `பாரில் மது குடிக்கணுமா? இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க' கேரளாவில் புதிய அறிவிப்பு!