`காவிரி ஆணையத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கர்நாடகம் தர வேண்டிய காவிரி பங்கு நீரை, காவிரி ஆணையத்தால் பெற்றுத் தர முடியவில்லை. உத்தரவிடும் அதிகாரம் இல்லாத காவிரி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரம் படைத்த ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்' எனக் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வலியுறுத்துகிறார்.காவிரி நீர்
Also Read: Tamil News Today: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேரத் தலைவர் நியமனம்!
இது தொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், ``காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக திங்கள்கிழமையன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எஸ்.கே.ஹல்தார் தலைமையில் திங்களன்று டெல்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டு முடிந்துவிட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கடந்த 2021 ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26-ம் தேதி வரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 டி.எம்.சி பாக்கி திறக்க வேண்டியுள்ளது. அதை உடனே திறந்துவிடச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால், காவிரி ஆணையக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய எஸ்.கே.ஹல்தார் அவ்வாறு ஆணையிடவில்லை. ஆனால், அவர் ஒரு தகவலைச் சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுச் சராசரியை ஒப்பிட்டால், மேட்டூரில் இந்தத் தேதியில் இருக்க வேண்டிய நீர் இருப்பு இல்லை. இக்காலத்தில் சராசரியாக 40 முதல் 45 டி.எம்.சி வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடும்போது கொஞ்சம் பற்றாக்குறை இருக்கிறது. அதையாவது கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளோம்'' என்றார்.
காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு வழங்கிய தண்ணீரின் அளவில், உச்ச நீதிமன்றம் ஓரளவு குறைத்து 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 டி.எம்.சி பற்றாக்குறை உள்ளது. பெ.மணியரசன்
ஆனால், காவிரி ஆணையத் தலைவர் கட்டப்பஞ்சாயத்தாகக் கூறியது, அதற்கும் குறைவான குத்துமதிப்பான அளவுத் தண்ணீர். ஆணையத்தின் இந்தக் குத்துமதிப்பான `பரிந்துரையையும்' கர்நாடக அரசு செயல்படுத்தப்போவதில்லை. ஏற்கெனவே ஒரு தடவைகூட காவிரி ஆணையத்தின் பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்தியதில்லை.
அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை. தமிழ்நாட்டை ஏமாற்றும் இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை. இப்போது ஆணையத்தின் முழுநேரத் தலைவராக அதே எஸ்.கே. ஹல்தாரை இந்திய அரசு அமர்த்தி இருக்கிறது. அதே ஹல்தார் வரும் நவம்பர் 30-ல் பணி நிறைவு பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு ஓய்வுக்காலப் பரிசாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இது என்ன உள்சூழ்ச்சியோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
Also Read: காவிரி நீர்:``உத்தரவிட்டால் போதாது; மேலாண்மை ஆணையம் நீரைப் பெற்றுத் தர வேண்டும்!"-டெல்டா விவசாயிகள்
இந்த மோசடி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள முழுநேர ஆணையத்தை அமைத்திட இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உடனே கோரிக்கை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து மக்களும் காவிரி மீட்பு எழுச்சி நாள் ஒன்றை உடனடியாகக் கடைப்பிடித்து, அந்நாளில் குமரிமுனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/S8b7PW
Wednesday, 29 September 2021
Home »
» `காவிரி ஆணையத்தால் நமக்கு எந்தப் பலனும் இல்லை; கலைத்துவிடலாம்!' - கொதிக்கும் பெ.மணியரசன்