மும்பையில், பணி செய்யும் இடத்தில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக பெண் ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி கவுதம் பட்டேல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த வழக்குகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று விதிமுறைகளைத் தெரிவித்துள்ளனர். Sexual Harassment (representational image)
Also Read: பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?
அதன்படி, `இது தொடர்பான அனைத்து வழக்குகளும் கேமரா முன்னிலையில் தனிப்பட்ட முறையில், அல்லது நீதிபதியின் அறையில் விசாரிக்கப்படவேண்டும். வெளிப்படையாக கோர்ட்டில் விசாரிக்கப்படக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளையும் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது. கோர்ட் உத்தரவு இல்லாமல் இது தொடர்பான செய்திகளை மீடியா வெளியிடக்கூடாது. இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது.
இது போன்ற வழக்குகளில் இதுவரை எந்த வித வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருக்கிறது. எனவே இதில் இரு தரப்பினரின் பெயர், முகவரி உட்பட எந்த வித அடையாளங்களையும் மீடியா உட்பட யாரும் வெளியிடக்கூடாது. சாட்சிகளும், எந்தத் தகவலையும் வெளியிடமாட்டோம் என்று உறுதிமொழிப்பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும்.
அதோடு தீர்ப்பின் விவரம் குறித்து இரு தரப்பினர், வழக்கறிஞர்கள், சாட்சிகள் உட்பட யாரும் வெளியில் சொல்லக்கூடாது. மீடியாவிற்கும் தகவல் கொடுக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் அது கோர்ட் அவமதிப்பாகக் கருதப்படும். Court- Representational Image
Also Read: ஐ.ஜி முருகன் பாலியல் வழக்கு: `தமிழகத்திலேயே விசாரிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உத்தரவு நகல்களிலும் இவ்வழக்கோடு தொடர்புடைய நபர்களின் அடையாளங்களான பெயர், மொபைல் நம்பர், இமெயில் ஐடி, முகவரி போன்ற எதுவும் இடம் பெறக்கூடாது. சாட்சிகளின் பெயர் மற்றும் முகவரியையும் தீர்ப்பு நகலில் குறிப்பிடக்கூடாது' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில், புகார் கொடுத்தவர், புகாருக்கு ஆளானவர் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்பதால் இது போன்று அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
http://dlvr.it/S8ZVhV
Wednesday, 29 September 2021
Home »
» `பணியிடப் பாலியல் புகார் வழக்குகளை வெளிப்படையாக விசாரிக்கக்கூடாது!' - மும்பை உயர் நீதிமன்றம்