மும்பை தாராவி பகுதியில் வசிப்பவர் அப்சனா கான் (18). இவர் அதிகாலையில் எழுந்ததும் உறக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் பல் தேய்க்கத் தொடங்கினார். ஆனால் பல் தேய்க்க ஆரம்பித்த சில நொடிகளில் பற்பசை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கான், உடனே துப்பிவிட்டார். பார்த்தபோது அது எலி மருந்து பேஸ்ட் என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கான், நன்றாக வாயைக் கொப்பளித்தார். அந்த நேரத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்பதால் வழக்கமான வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதோடு வயிற்றுவலியும் சேர்ந்துகொண்டது. தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக மட்டும் தெரிவித்தார். ஆனால் எலி மருந்தைக் கொண்டு பல் தேய்த்ததைச் சொல்லவில்லை. சொன்னால், திட்டுவார்கள் என்று பயந்துகொண்டு சொல்லவில்லை. கானை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
Also Read: புதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள்! -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்சித்திரிப்பு படம்
ஆனால் டாக்டர் கொடுத்த மருந்து வயிற்றுவலியைக் குறைக்கவில்லை. அதன் பிறகே எலி மருந்தால் பல் தேய்த்த விவரத்தைத் தன் தாயாரிடம் கான் தெரிவித்தார். உடனே அவரை சயானிலுள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சோனோகிராபி உட்பட அனைத்துச் சோதனைகளும் செய்து பார்த்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை என்று வந்தது. ஆனாலும் வலி குறையவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அதிக செலவாகும் என்று கருதி மீண்டும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு கான் உயிரிழந்துவிட்டார். இது குறித்து அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த டாக்டர், `எலி மருந்தைக் கொண்டு பல் தேய்த்ததால் விஷம் உடல் முழுவதுமாக வேகமாகப் பரவிவிட்டது' என்றார். இது குறித்து துணை கமிஷனர் பிரனயா அசோக் , "தற்கொலை மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து விசாரிக்கப்படும்" என்றார்.
http://dlvr.it/S7cyp3
Wednesday, 15 September 2021
Home »
» பல் துலக்க எலி மருந்தைப் பயன்படுத்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!