மும்பை விலேபார்லே பகுதியில் வசிப்பவர் இப்ராகிம் ஷேக். ஷேக்கிற்கு திருமணமான நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 3 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு கடந்த ஒன்றாம் தேதிதான் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவர் சிறையில் இருந்து வந்தவுடன் நேராக தனது மனைவியை காணும் ஆவலில் மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்றவருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு இருந்தார். அதோடு அவர் புதிய திருமணத்தின் மூலம் கர்ப்பமாக இருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஷேக், புதிய கணவனை விட்டுவிட்டு தன்னுடன் வரும் கூறி மிரட்டிவிட்டு சென்றார்.சித்தரிப்பு படம்
மறுநாள், ஷேக் தனது மனைவியை அழைத்து செல்ல வந்தபோது மனைவி அங்கு இல்லை. அவர் அங்கிருந்து தனது இரண்டாவது கணவன் வீட்டிற்கு சென்று இருந்தார். வீட்டில் இருந்த தனது மாமியாரிடம் தனது மனைவி எங்கே என்று கேட்டு தகராறு செய்தார் ஷேக். ஆனால் அவரது மனைவி எங்கு இருக்கிறார் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் ஷேக் தனது அத்தையை வீட்டில் கிடந்த டைல்ஸ் கல்லை எடுத்து தலையில் அடித்தார். அதோடு விடாமல் தன்னிடம் இருந்த கத்தியால் தனது அத்தையை சரமாறியாக குத்தியதோடு, அங்கு கிடந்த கம்பை எடுத்து கொடூரமாக சித்ரவதை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷேக்கை தேடி வந்தனர். ஷேக் புனேயில் பதுங்கி இருப்பது அவரின் மொபைல் போன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புனேயில் ஷேக் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
http://dlvr.it/S7X8vH
Tuesday, 14 September 2021
Home »
» சிறை சென்ற நேரத்தில் மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்! - மாமியாரை கொடூரமாக கொன்ற நபர்