பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மும்பையில் பெண் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறார். மும்பை சாக்கி நாக்கா பகுதியில், சாலையோரம் ரத்தக்கறையுடன் பெண் ஒருவர் கிடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையோரம் மயக்கநிலையில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்தப் பெண்ணை அருகில் நின்ற டெம்போவில்வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. அங்கு நின்ற டெம்போவை சோதனை செய்து பார்த்தபோது உள்ளே ரத்தக்கறையும் இருந்தது. பாலியல் வன்கொடுமை
பாதிக்கப்பட்ட பெண் ராஜாவாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் சோதித்தபோது அவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டது தெரியவந்தது. அவரின் பிறப்புறுப்பில் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்தக் காரியத்தில் ஈடுபட்ட மோகன் சௌகான் (45) என்பவரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இதற்கிடையே மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, பாதிக்கப்பட்ட அந்த 30 வயது பெண் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
Also Read: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வேலூர் சிறுமி! - போக்சோவில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை
இது குறித்து துணை கமிஷனர் மகேஷ்வர் ரெட்டி கூறுகையில், ``அதிகாலை 3 மணிக்கு சாக்கிநாக்கா சாலையோரம் பெண் ஒருவர் மயங்கியநிலையில் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோகன் என்பவரைக் கைதுசெய்திருக்கிறோம். அந்தப் பெண் மயக்கநிலையில் இருந்தார். தற்போது அவர் மயக்கம் தெளியாமலேயே இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண், தன்னை வன்கொடுமை செய்த நபருடன் டெம்போவுக்குள் கடுமையாகப் போராடியிருக்கிறார். இந்தப் போராட்டத்தின்போது, அந்தப் பெண்ணை டெம்போவிலிருந்து கீழே தள்ளியிருப்பது தெரியவந்திருக்கிறது. டெல்லி நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் மும்பை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார். இந்த வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
http://dlvr.it/S7N640
Saturday, 11 September 2021
Home »
» மும்பை: டெம்போவில் பாலியல் வன்கொடுமை; சித்ரவதை! - நள்ளிரவில் தெருவில் தூக்கி வீசப்பட்ட பெண்