கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புளிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வி.எம்.குட்டி. ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர், இசை மீது உள்ள ஆர்வத்தால் தன் ஆசிரியர் பணியைத் துறந்தார். வட கேரளாவை மலபார் என்றழைப்பார்கள். மலபார் பகுதியில் இஸ்லாமியர்களை மாப்பிளா என்றழைப்பார்கள்.வி.எம்.குட்டி
இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடல்களுக்கு பெயர் பெற்றவர் குட்டி. ஆல் இந்தியா ரேடியோவில் இவரின் மாப்பிளா பாடல்கள் மிகவும் பிரபலமானவை. 1972-ம் ஆண்டு மாப்பிளா பாடல்களை முதல் முறையாக பொதுவெளியில் பாடியவர் அவர்தான்.
அவராகவே பாடல் எழுதி, இசையமைத்து, பாடவும் செய்வார். 80-களில் வி.எம்.குட்டி – விளயில் ஃபஸிலா இணை பாடிய மாப்பிளா பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. இஸ்லாமியர்களின் வரலாறு, கலாசாரம், பாரம்பர்யம் என்று அனைத்தையும் மையப்படுத்தி இருப்பதால், வி.எம்.குட்டியை மாப்பிளா பாடல்களின் சுல்தான் என்றழைப்பார்கள். வி எம் குட்டி
Also Read: மறைந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல் தகனம்... முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி!
கேரளாவாக இருந்தாலும் சரி, வளைகுடா நாடுகளாக இருந்தாலும் சரி இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்ச்சிகளில் வி.எம்.குட்டியின் பாடல்கள்தான் ஒலிக்கும்.
இவர் சினிமாவில் பாடல்களும் பாடியிருக்கிறார், சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இசைப் பயணத்துக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இதய பிரச்னைக்காக கோழிகோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்பு காலமானார்.
அவருக்கு வயது 86. அவரது மரணத்துக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/S9rNPt
Tuesday, 19 October 2021
Home »
» கேரளா: மாப்பிளா பாடல்களின் சுல்தான் காலமானார்... இசைக் கலைஞர் வி.எம்.குட்டியின் வாழ்வும் சாதனைகளும்!