இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இன்னும் வேகம் தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை சுமார் 14 லட்சம் கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் இது குறைவுதான் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கர்ப்பிணிகள் மத்தியில் இப்போதுதான் விழிப்புணர்வு காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் தேவை என்று தெரிவித்துள்ளது.
http://dlvr.it/S8mtLx
Saturday, 2 October 2021
Home »
» "கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேகம் தேவை" - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்