போதைப்பொருள் வழக்கில் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அவருடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் தரப்பில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் சிங், மனுதாரர் புதிதாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் இல்லை என்றும் கடந்த பல ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் என்றும் வாதிட்டார்.
Also Read: ``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை..." வீட்டு வேலையாட்களுக்கு கௌரி கானின் புது உத்தரவு?!ஆர்யன் கான்
தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு காலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் ஆர்யன் கான் வளர்ந்து வரும் நடிகை ஒருவருடன் வாட்ஸ் அப்பில் போதைப்பொருள் தொடர்பாக சாட்டிங் செய்த விபரங்கள் அடங்கி இருந்தது. சிறப்பு நீதிமன்றம் புதன் கிழமை ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கியது. இதில் ஆர்யன் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட மேலும் 12 பேர் ஜாமீன் மனுத்தாக்கல் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்குகிறது. இம்மனு நீதிபதி வி.வி.பாட்டீல் தலைமையில் விசாரணைக்கு வருகிறது.
ஷாருக்கானின் மகன் தீபாவளிக்குள் ஜாமீனில் வெளியில் வந்து விடுவார் என்று அவரது குடும்பம் எதிர்பார்த்தது. ஆனால் இப்போது தீபாவளிக்காவது வெளியில் வருவாரா? என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் ஷாருக்கான், கௌரி கான் என குடும்பத்தினர் பக்ரீத், தீபாவளி இரண்டையும் கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்கின்றனர்.
http://dlvr.it/SB04Tw
Thursday, 21 October 2021
Home »
» ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி: ``தீபாவளிக்காவது வெளியில் வருவாரா?" கௌரி கான் எதிர்பார்ப்பு