``அக்டோபர் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நாங்கள் ரஷ்யா செல்வதால் கடை திறந்திருக்காது” - கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள டீக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை எழுதப்பட்டுள்ள வாக்கியம் இது. டீக்கடை வைத்து வி.ஐ.பி ஆனவர்கள் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த விஜயன் - மோகனா தம்பதிக்கும் தனி இடம் உண்டு.விஜயன்ன - மோகனா டீக்கடை
Also Read: கேரளா: மாப்பிளா பாடல்களின் சுல்தான் காலமானார்... இசைக் கலைஞர் வி.எம்.குட்டியின் வாழ்வும் சாதனைகளும்!
இஸ்ரேல், சீனா, இங்கிலாந்து, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என இதுவரை 25 நாடுகளுக்குப் பயணித்துள்ளனர் இந்தத் தம்பதி. அமிதாப்பச்சன், ஆனந்த் மஹேந்திரா என்று பல முக்கியப் பிரமுகர்கள் இந்தத் தம்பதி உலகச் சுற்றுலா செல்ல உதவி செய்துள்ளனர்.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் வெளிநாடு சுற்றுலாவுக்கு பிரேக் விட்டிருந்த விஜயன் – மோகனா தம்பதி தற்போது ரஷ்யா செல்ல உள்ளனர். இதுகுறித்து விஜயன் கூறுகையில், ``பயணங்கள் மீது எனக்கு அதிக ஆர்வம். அதுதான் எங்களை இப்படி உலகப் பந்தை சுற்றிவர வைத்துக்கொண்டிருக்கிறது. கேரளா தம்பதி விஜயன் மோகனா
ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை பிரமாண்டமாகக் கொண்டாடுவார்கள். அதைப் பார்க்கத்தான் இப்போது செல்கிறோம். கொரோனா பாதிப்பு இல்லாவிடின் கடந்தாண்டே ரஷ்யா சென்றிருப்போம். இப்போது, ரஷ்யா செல்ல எங்களிடம் போதிய நிதி இல்லை.
அதனால், டிராவல் ஏஜென்ஸியிடம் கடன் வாங்கித்தான் ரஷ்யா செல்கிறோம். திரும்பி வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்துவிடுவோம். பயணங்கள்தான் என்னுடைய ரத்தம். என்னுடைய கடை குறிப்பிட்ட நேரம்தான் திறந்திருக்கும். அரசு விடுமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் கடையைத் திறக்க மாட்டேன்.
இந்த வருமானமே எனக்குப் போதும். பணம் வரும், போகும். ஆனால், நினைவுகள் அப்படி இல்லை. ஒவ்வொரு முறை சுற்றுலா முடிந்து வரும்போதும், எங்கள் வயது குறைந்தது போல உணர்கிறோம். அந்த உற்சாகத்தில் இன்னும் ஓட முடிகிறது.
எங்களது கடமைகளை முடித்துவிட்டோம். இப்போது எங்கள் பயணங்களுக்கு மகள்கள், மருமகன்கள் துணை நிற்கின்றனர். எங்களால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் பயணித்துக் கொண்டேதான் இருப்போம். பிரதமர் மோடியைப் பார்க்க ஆசையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.மோகன்லாலுடன் மோகனா விஜயன்
Also Read: கேரளா: நிலச்சரிவில் 6 பேர் பலி; சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்; சபரிமலையில் அனுமதி மறுப்பு
71 வயதாகும் விஜயன் ஒரு டிராவல் ஏஜென்ஸிக்கு விளம்பரத் தூதராகவும் இருந்துள்ளார். சிங்கப்பூரில் அந்த ஏஜென்ஸியின் அலுவலகத்தை விஜயன்தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டீக்கடை க்ளோஸ்டு... டைம் டு டேக் ஆஃப்!
http://dlvr.it/S9wFJB
Wednesday, 20 October 2021
Home »
» கொரோனாவுக்கு பை-பை; ரஷ்யா பறக்கும் கேரளாவின் வைரல் சுற்றுலா தம்பதி!