கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பலாவில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் புட் பிராசசிங் டெக்னாலாஜி பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் வைக்கம் தலையோலப்பறம்பு பகுதியைச் சேர்ந்த நிதினா மோள்(22). இன்று மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்குச் சென்றுள்ளார் நிதினாமோள். தேர்வு எழுதி முடிந்து வெளியே வந்தவர் கிரவுண்ட் அருகே சென்றுள்ளார். அங்கு நிதினா மோளுடன் படித்துவந்த வகுப்புத் தோழன் அபிஷேக் பைஜூ என்பவர் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். பின்னர் திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த பிளேடு போன்ற சிறு கத்தியால் மாணவி நிதினா மோளின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான் மாணவன் அபிஷேக் பைஜூ. மாணவியின் அலறல் கேட்டு கல்லூரி வளாகத்தில் நின்ற பாதுகாவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடித்த நிதினா மோளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நிதினா மோள் உயிரிழந்தார்.போலீஸால் கைது செய்யப்பட்ட மாணவன் அபிஷேக் பைஜூ
பின்னர் போலீஸார் அங்கு சென்று மாணவன் அபிஷேக் பைஜூவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ``அபிஷேக் பைஜூவும், நிதினா மோளும் நெருங்கிய நண்பர்கள். கொரோனா காரணமாக கல்லூரி திறக்காமல் இருந்தது. ஆனால் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மூன்றாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு இன்று தொடங்கியது. காலையில் ஹால் டிக்கெட் விநியோகித்தார்கள். பின்னர் நாங்கள் தேர்வு எழுதினோம். அபிஷேக் பைஜூவும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தார்.
நாங்கள் தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது கல்லூரி வளாகத்தில் போலீஸ் நின்றது. எதற்காக போலீஸ் வந்தது என விசாரித்தபோது கொலை நடந்ததாக சொன்னார்கள். காலையில் அபிஷேக் பைஜூவிடம் சாதாரணமாகத்தான் இருந்தான். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னை என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்றனர். அபிஷேக் பைஜூ காதல் விவகாரத்தால் இப்படி நடந்துகொண்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
Also Read: தாம்பரம்: ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை; போலீஸார் தீவிர விசாரணைMurder
அபிஷேக் பைஜூ தனது வாக்குமூலத்தில், ``நிதினா மோளை நான் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தேன். சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. இதனால் எனக்கு அவள் மீது கோபம் ஏற்பட்டது. கொலை செய்யும் எண்ணத்தில் நான் வரவில்லை. என் கைகளை அறுத்து ரத்தத்தைக் காட்டி அவளை பயமுறுத்துவதற்காகத்தான் கத்தி கொண்டு வந்தேன்" எனக் கூறியிருக்கிறார். கல்லூரி வளாகத்திலேயே மாணவி கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S8kg8W
Friday, 1 October 2021
Home »
» கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை; சக மாணவன் செய்த கொடூரம்!