தைவான் நாட்டு வான் பரப்பில் சீனாவின் போர் விமானங்கள் பறந்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்பட 38 விமானங்கள் தங்கள் வான் பரப்பில் நுழைந்ததாகவும், பின்னர் தங்களின் போர் விமானங்களை கொண்டு அவற்றை விரட்டி அடித்ததாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்கள் மூலம் பிராந்திய அமைதிக்கு சீனா குந்தகம் விளைவிப்பதாக தைவான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. 1940ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக அறிவித்து கொண்டது. ஆனால் சீனா, தைவான் சொந்தம் கொண்டாடி வருகிறது.
http://dlvr.it/S8nZjB
Saturday, 2 October 2021
Home »
» தைவான் நாட்டின் வான் பரப்பில் பறந்த சீனாவின் போர் விமானம் : சர்வதேச அளவில் அதிர்வலை!