சிறையில் விசாரணை கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆர்யன் கானுக்கு 'N956' என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டது தெரியவந்தது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அக்டோபர் 21 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஆர்யன் கான் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வர முடியாமல் உள்ளார். இதுவரை ஆர்தர் சாலை சிறையின், தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த ஆர்யன் கான், கொரோனா பரிசோதனை சோதனை செய்த பின்னர் பொது சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஆர்யன் கானுடன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற நபர்களும் சிறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆர்யன் கானுக்கு 'N956' என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்யன் கான் தனது குடும்பத்தினரிடம் இருந்து பெற்ற ரூ.4,500 பணத்தை வைத்தே, சிறை உணவகத்தில் இருந்து உணவு மற்றும் பானங்களை வாங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதையும் படிக்க: “ஆர்யன்கான் வழக்கமாக போதைப்பொருள் உட்கொள்பவர்” : நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்
http://dlvr.it/S9byl7
Friday, 15 October 2021
Home »
» கைதி எண் N956: தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்து பொது சிறைக்கு மாற்றப்பட்ட ஆர்யன் கான்