உடலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக வேட்டைத் திறன் குறைந்த டி-23 என்ற ஆண் புலி ஒன்று முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் கடந்த 12-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி, இதை வெற்றிகரமாக உயிருடன் பிடித்தனர் வனத்துறையினர்.டைகர் 23
Also Read: T23 புலி: `சிகிச்சைக்குப் பின் வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும்!' - வனத்துறை அமைச்சர்
உடலில் பல இடங்களில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சோர்வுடன் இருந்த அந்தப் புலிக்கு சிகிச்சை அளிக்க மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள் மறு வாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனர்.
முதல் இரண்டு நாள்களுக்கு சிறிய கூண்டுக்குள் வைத்தே உணவு கொடுத்து சிகிச்சையளித்து வந்தனர். பிறகு ஆக்ரோஷம் குறையாமல் இருந்த டி23 புலியை மற்றொரு செல்லுக்கு மாற்றினர். இரண்டு மூன்று நாள்கள் அந்த செல்லுக்குள் வைத்தே உடல் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையளித்து வந்தனர்.t23
Also Read: பிடிபட்டது T23 புலி; முடிவுக்கு வந்தது வனத்துறையினரின் 21 நாள் போராட்டம்; கடைசி நேரப் பரபரப்பு!
டி23 புலிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``புலியோட உடம்புல பல இடத்துல காயங்கள் இருக்கு. சில புண்கள் மெதுவா குணமாகிட்டு வருது. லேசான கல்லீரல் பாதிப்பும் இருக்கு. ஹீமோகுளோபின் லெவல் கம்மியா இருந்தது. இப்போ கொஞ்சம் கூடிட்டு வருது. ஏழுலருந்து எட்டுக்கிலோ இறைச்சி சாப்பிடுது. கூண்டுல மோதி அதோட கோரைப் பல் ஒன்னு உடைஞ்சிருச்சி. மத்தபடி நார்மலா இருக்கு" என்றார்.
http://dlvr.it/SB3w3c
Friday, 22 October 2021
Home »
» `உடைந்த கோரைப்பல்; லேசான கல்லீரல் பாதிப்பு!' - எப்படி இருக்கிறது T23 புலி?