முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது. இதற்கிடையே அணையில் நீர் தேக்குவதற்கு `ரூல் கர்வ்' முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 11-ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு
Also Read: முல்லை பெரியாறு விவகாரம்: இந்த உண்மைகளை கேரள அரசியல்வாதிகள் உணர மறுப்பது ஏன்?
இதையடுத்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் 14-ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. நீர்வரத்து விநாடிக்கு 2880 கனஅடியாகவும், நீர்திறப்பு விநாடிக்கு 1867 கனஅடியாகவும் (தமிழகத்துக்கு) இருந்தது. இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல, கேரள மாநிலத்தில் முல்லைப்பெரியாறு முதல் இடுக்கி அணை வரை உள்ள வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது. நீர்வரத்து 3378 கனஅடியாகவும், நீர்திறப்பு 2300 கனஅடியாகவும் உள்ளது. எனவே விரைவில் அணைநீர்மட்டம் 142 அடியை எட்டும் நிலை உள்ளது. இதனால் கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கவிட வாய்ப்புள்ளதால், இடுக்கி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கும், அரசின் முகாம்களுக்கும் செல்ல இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கரையோர பகுதி
Also Read: முல்லைப் பெரியாறு: பேபி அணையைப் பலப்படுத்த கேரள அரசு பச்சை கொடி... புதிய அணை திட்டம் கைவிடப்படுமா?!
கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின், 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டது. இதையடுத்து 4-வது முறையாக 142 அடியை எட்ட உள்ளதால் தமிழக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் 3 போக சாகுபடியை உறுதி செய்ய முடியும் என்றும், அணையின் உறுதித் தன்மையும் மீண்டும் நிரூபித்துக் காட்டப்படும் என்றும் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/SCXKLD
Monday, 15 November 2021
Home »
» முல்லைப் பெரியாறு: 142 அடியை எட்டும் தண்ணீர்; 7 ஆண்டுகளில் 4-வது முறை; இன்றைய நிலவரம் என்ன?