வங்கக்கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 80 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 140 கி.மீ தொலைவிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் நேற்று இரவிலிருந்தே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இன்னும் சிலமணி நேரங்கள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்து செல்ல உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி
http://dlvr.it/SCJzkw
Thursday, 11 November 2021
Home »
» சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்