திமுக நிர்வாகிகள் அனைவரும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயபுரம், திருவொற்றியூர், மயிலாப்பூர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் இடைவிடாமல் மழை பெய்கிறது. இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர், தனது அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பவை: "வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்புடைய செய்தி: கனமழை எதிரொலி: தமிழகத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி - மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
http://dlvr.it/SC3PjH
Sunday, 7 November 2021
Home »
» திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகளோடு இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும்: முதல்வர்