மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கின் பண மோசடி தொடர்பான வழக்கை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்துவந்தனர். விசாரணைக்காக அமலாக்கத்துறையின் ஐந்து சம்மன்களுக்க்கு ஆஜராக மறுத்த அனில் தேஷ்முக், மும்பை உயர் நீதிமன்றம் கைவிட்டதால் கடந்த ஒன்றாம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அனில் தேஷ்முக்கை நள்ளிரவில் கைதுசெய்தனர். அவர், அமலாக்கத்துறையின் காவல் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனில் தேஷ்முக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அனில் தேஷ்முக்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அனில் தேஷ்முக்
அப்போது குறுக்கிட்ட அனில் தேஷ்முக், சிறையில் வீட்டுச் சாப்பாடு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது நீதிபதி, ``முதலில் சிறைச் சாப்பாட்டை சாப்பிடுங்கள். அதன் பிறகு வீட்டுச் சாப்பாட்டை அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்கிறேன்" என்று தெரிவித்தார். அதையடுத்து, மருத்துவக் காரணங்களுக்காகத் தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு சிறையில் படுக்கை வசதி கொடுக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்தவர். தன் பதவிக்காலத்தில், அனில் தேஷ்முக் மும்பையிலுள்ள பீர் பார்கள், ஓட்டல்களில் மாதம் ரூ.100 கோடி மாமூல் வாங்கிக் கொடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார். இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அமைச்சர் பதவியிலிருந்து அனில் தேஷ்முக் விலகினார்.
Also Read: 'மகாராஷ்டிரா: 100 கோடி மாமூல் விவகாரம்! - மாஜி அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை வழக்கு'
http://dlvr.it/SCZRqS
Tuesday, 16 November 2021
Home »
» ``முதலில் சிறை சாப்பாட்டைச் சாப்பிடுங்கள்!" - மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருக்கு கோர்ட் அறிவுரை