யானைகள் மிகவும் அறிவுபூர்வமான ஓர் காட்டுயிர். யானைகள் எந்தளவுக்கு வலிமையானவேயோ, அதே அளவுக்கு மெல்லிய இதயத்தை கொண்டவை. அதனால்தான், ஒவ்வொரு முறையும் யானைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் அதிக வலியை கொடுக்கும். தமிழக – கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை
Also Read: பள்ளத்தில் விழுந்து விபத்து; பலனளிக்காத சிகிச்சை; பரிதாபமாக உயிரிழந்த குட்டி யானை!
வனத்தை ஒட்டி நடந்த ஏராளமான மாற்றங்களால், யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் ஊருக்குள் வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆனால், அப்படி வரும் யானைகள் ரயில் அடிபட்டு இறப்பதும், பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கி உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை அருகில் ஓர் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை வலம் வந்துள்ளது.
அப்போது கோயில் நிலத்தை கடக்க முயற்சி செய்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானையை தன் தும்பிக்கையால் தட்டி தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் குட்டி அசைவில்லாமல் இருந்ததால், தாய் யானை ஏமாற்றத்துடன் நகர்ந்து சென்றது. இதை அங்கிருந்த பொதுமக்களும் வனத்துறையும் வீடியோவாக எடுத்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி.. தட்டி எழுப்ப முயற்சித்த தாய் யானை.. மனதை உருக்கும் சம்பவம். வைரலாகும் வீடியோ. #Kerala | #Elephant | #ViralVideo pic.twitter.com/B4wxTPzRQC— பசுமை விகடன் (@PasumaiVikatan) November 17, 2021
Also Read: தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யானை; பின்னணியில் வேட்டை கும்பலா?
தாய் யானை அங்கிருந்து சென்றவுடன் வனத்துறையினர் உடற்கூறாய்வு பணியை மேற்கொண்டனர். உயிரிழந்த குட்டி யானையை, தாய் யானை எழுப்ப முயற்சி செய்யும் காட்சி பார்ப்போரின் கண்களை கலங்க வைத்தது.
http://dlvr.it/SCgPLL
Wednesday, 17 November 2021
Home »
» மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி; தட்டி எழுப்ப முயற்சி செய்த தாய் யானை; உருகவைத்த வீடியோ!