மும்பையைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனக்குத் திருமண வரன் தேடி, கடந்த மார்ச் மாதம் திருமண தகவல் மையம் ஒன்றின் இணையதளத்தில் தன் விவரங்களைப் பகிர்ந்திருக்கிறார். பதிவு செய்த நாளிலிருந்து, வரன்கள் தொடர்பாகப் பலரிடமிருந்து அந்த பெண்ணுக்கு போன் கால்கள் வந்திருக்கிறது. அந்த வகையில், அலெக்ஸ் பட்டேல் என்பவரும் அவரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, அந்த பெண்ணிடம் பேசிய அலெக்ஸ் பட்டேல், தான் இந்தியக் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதை அந்த பெண்ணும் நம்பியிருக்கிறார். பின்னர், இருவரும் தங்கள் போன் நம்பர்களை மாற்றிக்கொண்டு சாட்டிங் செய்து வந்திருக்கின்றனர். அந்த பெண்ணின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்ற அலெக்ஸ், அவரை காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், ``உனக்குப் பரிசுப்பொருள்களை அனுப்ப விரும்புகிறேன். உனக்கு கூரியரில் வெளிநாட்டு கரன்சி, பரிசுப் பொருள்களை அனுப்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். அதை நம்பிய அந்த பெண் அதற்காகக் காத்திருந்திருக்கிறார். அலெக்ஸ் கூறியதை போலவே, அடுத்த சில நாள்களில் கூரியரில் இருந்து பேசுவதாக நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு போன் செய்து, ``உங்களுக்கு கூரியர் வந்திருக்கிறது. அதை டெலிவரி செய்வதற்கு பிராஸசிங் கட்டணம் செலுத்தவேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணும், கூரியர் கம்பெனி ஊழியர் தெரிவித்த கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்தியிருக்கிறார்.ஆன்லைன் மோசடி
இந்த நிலையில், மீண்டும் அதே நபர் போன் செய்து, ``பார்சலில் தங்க நகைகள், 30 ஆயிரம் டாலர் அமெரிக்க கரன்சி இருக்கிறது. அதனால், அதற்கான சுங்க வரியைச் செலுத்தினால் மட்டுமே பார்சலை டெலிவரி செய்ய முடியும்" என்று தெரிவித்திருக்கிறார். உடனே அந்த பெண் அலெக்ஸுக்கு போன் செய்து இது குறித்து தெரிவித்திருக்கிறார். அலெக்ஸும் கூரியர் கம்பெனிக்காரர் சொன்ன பணத்தைச் செலுத்திவிடும்படி தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்த பெண் கூரியர் கம்பெனி ஊழியர் சொன்ன படி ரூ.6.25 லட்சத்தைச் செலுத்தினார். ஆனால், பார்சல் டெலிவரி செய்யப்படவில்லை. அதன் பிறகு அலெக்ஸுக்கு போன் செய்த போது அவரின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த அந்த பெண் உடனடியாக, இது தொடர்பாக சைபர் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸ் அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: மும்பை: நட்சத்திர ஹோட்டலில் 8 மாத ஆடம்பர வாழ்க்கை; ரூ.25 லட்சம் பாக்கி! - ஜன்னல் வழியே தப்பிய நபர்
http://dlvr.it/SC6FqJ
Monday, 8 November 2021
Home »
» மும்பை: `மேட்ரிமோனி மூலம் பழக்கம்; போலி கடற்படை அதிகாரியிடம் பணத்தைத் தொலைத்த பெண்!'