கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சி கம்பீர் (25). திருச்சூரைச் சேர்ந்தவர் டாக்டர் அஞ்சனா ஷாஜன் (24). 2019-ம் ஆண்டு கேரள மாநில அழகிப் போட்டியில் ஆன்சி கம்பீர் மிஸ் கேரளம் பட்டத்தை வென்றார். அதே போட்டியில் அஞ்சனா ஷாஜன் இரண்டாவது இடத்தைப் (ரன்னர் அப்) பிடித்திருந்தார். ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக் ஆகியோர் நவம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.
காரை டிரைவர் அப்துல் ரஹ்மான் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில், ஒரு பைக்கில் மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இதில் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்தனர். முஹம்மது ஆசிக் மற்றும் டிரைவர் அப்துல் ரஹ்மான் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முஹம்மது ஆஷிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்துல் ரஹ்மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.விபத்தில் நொறுங்கிய கார்
Also Read: ̀நான் டெல்லி சென்றது உண்மைதான்; ஆனால்..?' - போட்டோஷாப் படம் குறித்து வானதியின் பதில்
இந்நிலையில், அப்துல் ரஹ்மான் மதுபோதையில் கார் ஓட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ரஹ்மான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடக்கொச்சியில் உள்ள அப்துல் ரஹ்மானின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 31-ம் தேதி இரவு டிஜே பார்ட்டியில் அவர்கள் கலந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்கை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஆன்சி கம்பீர் உள்ளிட்ட நான்கு பேரும் ஹோட்டலுக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் ஹோட்டலில் டிஜே பார்ட்டி நடந்த ஹாலில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.மிஸ் கேரளா 2019 ஆன்ஸி கம்பீர்
அந்த ஹோட்டலில் இரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் மது விருந்து நடந்ததாக கடந்த மாதம் 23-ம் தேதி வாக்கில் சீல் வைக்கப்பட்டது. எனவே நள்ளிரவு வரை பார்ட்டி நடந்ததை மறைப்பதற்காக அந்தக் காட்சிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் உள்ளிட்ட முன்று பேரின் மரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அழிக்கப்பட்ட சி.சி.டி.வி கேமரா பதிவுகளை மீட்கும் படலத்திலும் போலீஸ் சைபர் டீம் இறங்கியுள்ளது.
http://dlvr.it/SCNLMc
Friday, 12 November 2021
Home »
» கேரள மாடல்கள் விபத்து மரணத்தில் திருப்பம்; சிசிடிவி காட்சிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ்!