தொடர் கனமழையால், சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். மருத்துவர்கள் அறை, மாத்திரை கிடங்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை, நோயாளிகள் அனுமதிக்கப்படும் அறை, கழிவறை என அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்த இரண்டு பேரை தவிர அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளனர். சளி, காய்ச்சல் காரணமாக தற்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் தேங்கியுள்ள மழை நீரால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விரைவில் மழைநீர் அகற்றப்படும் என சிறப்பு கண்காணிப்பு அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதையும் படிக்க: கூடுவாஞ்சேரியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: தவிக்கும் மக்கள்
http://dlvr.it/SCJzkn
Thursday, 11 November 2021
Home »
» கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி