மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்துக்கு வெளியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டு இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில், பல போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு எங்கே இருக்கிறது என டாக்ஸி டிரைவர் ஒருவரிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேட்டிருக்கின்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டாக்ஸி டிரைவர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இது குறித்துத் தெரிவித்திருக்கிறார். போலீஸாரிடம் டாக்ஸி டிரைவர் கூறுகையில், ``காரில் வந்த இரண்டு பேர் தென்மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் அருகில் என்னிடம் முகேஷ் அம்பானியின் அண்டிலியா கட்டடம் எங்கிருக்கிறது என்று கேட்டார்கள்.சுரேஷ் பட்டேல்
நான் மொபைல் ஆப்பில் தேடும் படி அவர்களிடம் கூறினேன். ஆனால், அவர்கள் எங்களிடம் மொபைல் ஆப் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்" என்று தெரிவித்திருக்கிறார். டாக்ஸி டிரைவரிடம் வாக்குமூலம் வாங்கிய போலீஸார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். காரில் வந்த இரண்டு பேரும், இரண்டு பைகள் வைத்திருந்ததாகவும் டாக்ஸி டிரைவர் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, போலீஸார் அம்பானியின் இல்லத்துக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர்.
அதேபோல, அம்பானி இல்லத்துக்குச் செல்லும் வழியில் தடுப்புகளை ஏற்படுத்தி, அந்த வழியாக வரும் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு காரில் வந்தவர்கள் யார் என்பதை போலீஸார் தற்போது கண்டுபிடித்திருக்கின்றனர். சுரேஷ் பட்டேல் என்பவர் அவர் நண்பர்களுடன் அம்பானி இல்லத்தைப் பார்ப்பதற்காக வந்ததாக போலீஸார் கூறுகின்றனர். இருப்பினும், அம்பானி இல்லத்துக்கு முன் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
Also Read: அம்பானி வீடு; வெடி பொருள்களுடன் கார்! - என்கவுன்ட்டர் ஸ்பெலிஸ்ட்டை நள்ளிரவில் கைதுசெய்த என்.ஐ.ஏ
http://dlvr.it/SC9qX9
Tuesday, 9 November 2021
Home »
» `அம்பானி வீட்டுக்கு வழி கேட்ட இளைஞர்கள்; போலீஸுக்குத் தகவல் தெரிவித்த டாக்ஸி டிரைவரால் பரபரப்பு!'