பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சாம் தன் மனைவி பூனம் பாண்டேவை தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதில், பூனம் பாண்டே ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பூனம் பாண்டே தன் கணவர் மீது போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர் கணவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பூனம் பாண்டே - சாம்
சாம் தாக்கியதில் பூனம் பாண்டேவுக்கு காயங்கள் அதிகமாக ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். சாம் ஏற்கெனவே பலமுறை பூனம் பாண்டேவை தகராறில் தாங்கியிருக்கிறார். இருவரும் திருமணமான புதிதில் கோவாவுக்குச் சென்ற போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சாம் பூனம் பாண்டேவை அடித்து உதைத்தார். அதில், பூனம் பாண்டே கொடுத்த புகாரின் பேரில் சாம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பூனம் பாண்டேவும் அப்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அடித்தவருடன் சேர்ந்து வாழ முடியாது" என்று தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் மீண்டும் ஊடகங்களை அழைத்து, ``எங்களுக்குள் இருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடன் இருக்கிறோம். திருமணம் என்றால் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நான் இப்போது சாமை மிகவும் நேசிக்கிறேன்" என்று காதல் பொங்கத் தெரிவித்திருந்தார். ``பூனமும், சாமும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் எந்த வித பிரச்னையும் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்குப் பிறகு தான் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது'' என்கின்றனர் நடிகை பூனம் பாண்டேவுக்கு நெருக்கமானவர்கள்.
Also Read: பூனம் பாண்டே ஆப்... தடை செய்த கூகுள்... காரணம் என்ன?
http://dlvr.it/SC9qWj
Tuesday, 9 November 2021
Home »
» நடிகை பூனம் பாண்டே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - அடித்து உதைத்த கணவன் கைது!
நடிகை பூனம் பாண்டே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - அடித்து உதைத்த கணவன் கைது!
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!