மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் லஞ்ச ஊழல் வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் காவல் முடிந்ததை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி எச்.எஸ்.சத்பாய், அனில் தேஷ்முக்கை 14 நாள்கள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டார். அப்போது, அனில் தேஷ்முக், உடனே தனக்கு வீட்டுச்சாப்பாடு எடுத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு பதிலளித்த நீதிபதி சத்பாய், ``முதலில் சிறை சாப்பாடு சாப்பிடுங்கள் பிறகு பார்க்கலாம்!" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்து அடுத்த இரண்டு நாள்களில், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டுச் சாப்பாடு எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்த, நீதிபதி சத்பாய் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை ஐகோர்ட்
மகாராஷ்டிராவின் வறண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் யவத்மால் மாவட்டத்தின், காலாப்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி சத்பாய் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதி சத்பாய், எம்.பி-க்கள், எல்.எல்.ஏ-க்க, முன்னாள் அமைச்சர்கள் என பெரும் புள்ளிகள் பலரின் மீதான வழக்குகளை விசாரித்திருக்கிறார். குறிப்பாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கட்சே, அனில் தேஷ்முக், சகன் புஜ்பால் ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மும்பை உயர் நீதிமன்ற பதிவாளர், நீதிபதி சத்பாயின் இடமாறுதலுக்கான உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். இருப்பினும், இந்த இடமாறுதலை ஏற்காமல் மருத்துவ காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்க நீதிபதி சத்பாய் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிபதியின் இடமாறுதலுக்கு வழக்கறிஞர்கள் மத்தியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அனில் தேஷ்முக் மீதான வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
Also Read: ``முதலில் சிறை சாப்பாட்டைச் சாப்பிடுங்கள்!" - மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருக்கு கோர்ட் அறிவுரை
http://dlvr.it/SCgPNK
Wednesday, 17 November 2021
Home »
» மும்பை: `முன்னாள் அமைச்சருக்கு அறிவுரை கூறிய நீதிபதி... இரண்டு நாள்களில் இடமாற்றம்!'