மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் மேலும் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று அதிகவேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அத்தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ள நிலையில் அங்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 6 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இவர்களில் ஒருவர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்தார். இதையும் படிக்க: 90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய கிட்: டெல்லி ஐஐடி கண்டுபிடிப்பு மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ராஜஸ்தானில் 17 பேரும், குஜராத்தில் 4 பேரும், கர்நாடகாவில் 3 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, ஆந்திரா, சண்டிகரில் தலா ஒருவர் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையும் படிக்க: தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதா? - மருத்துவத்துறை அமைச்சர் விளக்கம்
http://dlvr.it/SFP151
Wednesday, 15 December 2021
Home »
» மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு