உத்தரப்பிரததேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள பகுதி விழா கோலம் பூண்டிருந்தது. பிரதமர் மோடியின் உச்சக்கட்ட பாதுகாப்பை மீறி சாமானியர் அணிவித்த தலை பாகை,தொழிலாளர்கள் உடன் மதிய உணவு, அகவர்களுடனே குழு புகைப்படம் என பிரதமரின் பல செயல்பாடுகள் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் பாஜக , காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி , பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உபி-யில் 3 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். காசியில் பிரதமர் மோடி
அதில் ஒன்று வாரணாசியில் புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகமாகும். கங்கை நதியிலிருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பக்தர் நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காக 2019 -ம் ஆண்டு 600 கோடி செலவில் புனரமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 23 கட்டடங்கள் 339 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக 300 பேரின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு, 1400 கடைக்காரர்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதாகவும், 40 பழைமையான கோவில்கள் இந்த புனரமைப்பு திட்டத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் உத்தரப்பிரதேசத்தை மையப்படுத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டும் வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். குறிப்பாக பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அதிகப்படியான திட்டங்கள் தொடக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு உத்தரப்பிரதேச பகுதியில் அமைந்துள்ள பூர்வாஞ்சல் பகுதியை குறிவைத்து பிரதமர் மோடி தொடங்கி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி வரை அதிகப்படியான கூட்டங்கள், திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். பூர்வாஞ்சல் பகுதியில் அதிக தொகுதியை கைப்பற்றுவதன் மூலம் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற கணக்கு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. காசியில் பிரதமர் மோடி
28 மாவட்டங்கள் கொண்ட பூர்வாஞ்சல் பகுதியில், 156 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. 2017 -ம் ஆண்டு தேர்தலில் 106 இடங்களை பாஜக கைப்பற்றியது, 2012 ஆம் ஆண்டு சமாஜ்வாதி 85 இடங்களையும், 2007 -ம் ஆண்டு பகுஜன் சமாஜ் 70 இடங்களை கைப்பற்றி கடந்த காலங்களில் ஆட்சியை பிடித்தனர். 2017 தேர்தலின் போது கிழக்கு உ.பி-யில் அதிகப்படியான இடங்கள் பாஜக கைப்பற்ற காரணமாக இருந்தது ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி. ஆனால் தற்போது சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
Also Read: Tamil News Today: புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
இந்த பூர்வாஞ்சல் பகுதியில் ராஜ்பர் சமூக வாக்குகள் 18 முதல் 20 சதவீதம் வரை இருப்பதால் வாரணாசி, கோரக்பூர் மற்றும் அசம்கர் உட்பட 125 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு தேர்தலில் 4 இடங்களை மட்டுமே வெற்றி பெற்ற ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு மாநில அமைச்சரவையில் அமைச்சர் பதவியை பாஜக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் பாஜக பூர்வாஞ்சலை குறித்து வைத்து வேலை செய்து வரும் நிலையில் மறுபக்கம் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து எம்எல்ஏ மற்றும் முக்கிய தலைவர்களை சமாஜ்வாதி தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ வினய் ஷங்கர் திவாரி மற்றும் முன்னாள் எம்.பி குஷால் திவாரி சமாஜ்வாதி கட்சிக்கு தாவியுள்ளனர். அதே போல பாஜக முக்கிய தலைவர்களாக பார்க்கப்படும் முக்தார் அன்சாரி மற்றும் ஹரி சங்கர் திவாய் ஆகியரை அகிலேஷ் யாதவ் தரப்பு தங்கள் பக்கம் கொண்டுவந்துள்ளது. இது தவிர ஆளும் பாஜகவின் 9 எம்எல்ஏ-கள் கட்சி தாவயிருப்பதாகவும் கூறப்படுகிறது.காசியில் பிரதமர் மோடி
காசி கோவிலை சுற்றி 2022 சட்டமன்ற தேர்தல் கணக்குகள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் 2015 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க அமைச்சரை முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்ததாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கோவிலை சுற்றி பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரே புனரமைப்பு பணிக்காக கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கு 2019 முதல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். புனரமைப்பு பணியின் போது பல கோவில்கள் சிலைகள் இடிக்கப்பட்டதாகவும் அங்கு வாழும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.காசியில் பிரதமர் மோடி
ஆனால் அங்குள்ள அதிகாரிகள் தரப்பு அதை மறுத்துள்ளது.17,18,19 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட 3 முதல் 5 அடுக்கு கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகவும் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் தற்போது மாற்று இடம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காசி கோவிலுக்கு 100 மீட்டரில் இருந்த 200 ஆண்டு பழமைவாய்ந்த மாணவர் விடுதியும் இடிக்கப்பட்டு இருக்கிறது. சமஸ்கிருதம் கற்று கொள்ள காசி வரும் மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெற்று வந்திருக்கிறார்கள். முன்பு இது காசி கோவில் தலைமை குருக்கள் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. 1983 ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னதாக இறுதியாக தலைமை குருக்களாக இருந்த ராஜேந்திர திவாரி இந்த புனரமைப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
காசி கோவில் புனரமைப்பு பணிகள் மேற்க்கொள்ள இருப்பதாக 2019 -ல் பணி தொடங்கியதும் கோவிலுக்கு பத்து மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி குறித்து பேச்சுக்கள் வந்து சென்றதும் அரசியலில் கவனிக்கப்பட்டது. காசியில் பிரதமர் மோடி
காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு, அதை ஒட்டிய நிகழ்ச்சிகள் பிரதமர் மோடியின் பயணம் பாஜகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு நிச்சயம் உதவும் என பாஜக நம்புகிறது , அந்த அரசியல் கணக்கை முறியடிக்கும் வேலையை சமாஜ்வாதி கட்சி தொடங்கி விட்டது. ``என்னை பொறுத்தவரை மக்களே எனது தெய்வங்கள்" என பிரதமர் மோடியின் பேச்சு தேர்தலில் எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!
Also Read: காசி மாநகர் அற்புதங்கள்: 600 கோடி செலவில் 239 ஆண்டுகளுக்குப் பின் மிளிரும் விஸ்வநாதர் ஆலய வளாகம்!
http://dlvr.it/SFL4KV
Tuesday, 14 December 2021
Home »
» உத்தரப்பிரதேசம்: மோடியின் வாரணாசி விசிட்... `பூர்வாஞ்சல்’ கணக்கு?! - ஒரு அரசியல் பார்வை