திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் 3 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதாவின் கணவர் கணேசன் மீது, கோவை மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் 4 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் குனியமுத்தூரில் மூதாட்டியிடம் கொள்ளையடித்த புகாரில், கணேசனை கைது செய்ய காவல்துறையினர் வந்தனர். அப்போது, சுவேதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய் உட்பட 17 பேர் குனியமுத்தூர் காவல்துறையினரை தாக்கி கைவிலங்கை வெல்டிங் பட்டறைக்கு கொண்டு சென்று வெட்டி எடுத்துவிட்டு தப்பிக்க வைத்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக, உமராபாத் காவல் நிலையத்தில் குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம் அளித்த புகாரின்பேரில், 17 பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா வீட்டில் காவல்துறையினர் 3 மணிநேரத்திற்கு மேலாக சோதனை செய்தனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
இதையும் படிக்க: 16 டன் முந்திரி பருப்பு கடத்தல் வழக்கு - முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டர் சட்டம்
http://dlvr.it/SFXfwd
Friday, 17 December 2021
Home »
» கைவிலங்கை துண்டித்து தப்பியோடிய வழக்கு: ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் போலீசார் சோதனை