மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகிலிருக்கிறது மாதேரன் மலைப்பகுதி. சுற்றுலாத் தலமான மாதேரனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் ஏராளமான தங்கும் விடுதிகளும் இந்த மலைப்பகுதியில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அங்கிருக்கும் விடுதி ஒன்றுக்கு பூனம் பால் (30) என்ற பெண், தன் நண்பருடன் வந்து தங்கியிருந்திருக்கிறார். மறுநாள் காலை லாட்ஜ் ஊழியர், பூனம் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது பூனம் கொலை செய்யப்பட்டு தலையில்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். உடனே லாட்ஜ் உரிமையாளர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைசெய்யப்பட்ட பெண்
கொலையாளி கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் தலை, ஆடைகள் மற்றும் உடைமைகளை எடுத்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவருடன் வந்தவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் முகம் வேறு ஒரு இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. குற்றவாளி பெண்ணின் அடையாளத்தை மறைக்கத் தலையை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டான்.
குற்றவாளியையும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையையும் கண்டுபிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று படைகள் மும்பை போலீஸாருடன் இணைந்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர். இரண்டு தனிப்படையினர் மாதேரன் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையைத் தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்திலிருந்து பேக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் லாட்ஜில் தங்குவதற்கு ஆதார் கார்டு போன்ற முகவரி ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
Also Read: `விவாகரத்தான பெண்கள் தான் டார்கெட்!' - மும்பை பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது!
http://dlvr.it/SFGR1P
Monday, 13 December 2021
Home »
» லாட்ஜில் தங்கிய பெண் தலை துண்டித்துக் கொலை - ஆண் நண்பருக்கு போலீஸ் வலை!